இந்தியாவில் உள்ள எந்த ஒரு நகரத்தில் உள்ள உணவையும் எந்த ஒரு நகரத்திலிருந்து ஆர்டர் செய்யலாம் என்ற இன்டர்சிட்டி சேவை என்பதை சமீபத்தில் ஜொமாட்டோ நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த சேவையின்படி ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் உணவு டெலிவரி செய்யப்படும் என்றும் உணவு பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல்கட்டமாக ஒருசில நகரங்களுக்கு இடையே மட்டும் இந்த சேவை இருக்கும் என்றும் விரைவில் அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் இந்த இண்டர்சிட்டி சேவையை பயன்படுத்திய வாடிக்கையாளர் ஒருவருக்கு கிடைத்த அதிர்ச்சி குறித்து தற்போது பார்ப்போம்.
இண்டிகோவின் 6 புதிய நிறுவனம்.. வெளிநாடு செல்லும் பயணிகள் மகிழ்ச்சி!
ஜொமாட்டோ இன்டர்சிட்டி சேவை
ஜொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் மட்டுமின்றி இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்கள் குருகிராம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் கன்வால். இவர் ஜொமாட்டோ நிறுவனத்தின் இன்டர்சிட்டி சேவையை பயன்படுத்த முடிவு செய்து, ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்தின் பிரியாணியை ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு கிடைத்தது ஒரு சிறிய பெட்டி மட்டுமே என்பதால் அவர் பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
சிறிய பெட்டி
இது குறித்து கன்வால் தனது ட்விட்டரில் தனக்கு பார்சல் புகைப்படத்தை பதிவு செய்து, ‘இன்டர்சிட்டி சேவை என்பது மிகச் சிறந்த யோசனையாக எனக்கு தோன்றியது. அதனால் எனக்கு பிடித்த உணவை நான் சில நாட்களுக்கு முன்னர் இன்டர்சிட்டி சேவை முறையில் ஆர்டர் செய்தேன். ஆனால் எனக்கு ஜொமாட்டோ நிறுவனம் ஒரு சிறிய பெட்டியை மட்டுமே அனுப்பி உள்ளது’ என்று புகைப்படத்துடன் பதிவு செய்தார்.
மன்னிப்பு
மேலும் அவர் இந்த ட்விட்டை ஜொமாட்டோ நிறுவனத்தின் சி.இ.ஓவுக்கு டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏமாற்றமடைந்த அந்த வாடிக்கையாளரின் ட்விட் மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் ஜொமாட்டோ நிறுவனம் இதுகுறித்து அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. மேலும் கன்வால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு அவர் ஆர்டர் செய்த பிரியாணியை விட இருமடங்கு பிரியாணியை அனுப்பி வைத்தது.
வெற்றி
இதுகுறித்து ஜொமாட்டோ வாடிக்கையாளர் சேவை பிரிவு தலைவரான சுஷாந்த் என்பவர் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்பின்னர் கன்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நான் ஆர்டர் செய்த பிரியாணியை விட அதிகமான அளவு பிரியாணி எனக்கு அனுப்பப்பட்டது. இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் உள்ள இந்த சேவையை தவறு இல்லாமல் செய்தால் நிச்சயம் இது வெற்றி பெறும்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.
Zomato shareholder orders ‘inter-city’ biryani, receives only salan
Zomato shareholder orders ‘inter-city’ biryani, receives only salan | இன்டர்சிட்டி சேவையில் பிரியாணி ஆர்டர்.. ஜொமாட்டோ வாடிக்கையாளர்க்கு அதிர்ச்சி!