”சமோசாவுக்கு ஸ்பூன் தரமாட்றாங்க” என சமோசா கடைக்கு எதிராக முதலமைச்சர் ஹெல்ப் லைனுக்கு ஒரு நபர் போன்கால் செய்துள்ளார்.
மத்தியப் பிரதேச முதலமைச்சரின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு ஒரு வித்தியாசமான தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் சமோசா கடை ஒன்றில் மோசாமான சேவை நடத்துவதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாருக்கான காரணம் தான் நகைச்சுவையாக இருக்கிறது.
மத்திய பிரதேச சத்தர்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள ராகேஷ் சமோசா என்ற கடைக்கு எதிராக புகார் தெரிவிக்க ஒரு நபர் போன்கால் செய்துள்ளார். அந்த புகாரில், ”சதர்பூர் பேருந்து நிலையத்தில் ராகேஷ் சமோசா என்ற பெயரில் ஒரு கடை உள்ளது. அங்கு காலை சமோசா வாங்கியதாகவும், பார்சல் செய்ய சமோசாவுக்கு ஸ்பூன் மற்றும் தட்டுகள் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தயவு செய்து இந்த பிரச்சனையை சீக்கிரம் தீர்த்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் புகாரின் ஆதாரங்களின்படி, சமோசா கடையின் ஊழியர் கட்லரி உணவை வழங்க மறுத்ததை அடுத்து அவர் புகார் எழுப்பியுள்ளது தெரியவந்தது. மேலும் அந்த புகாரை முதலமைச்சர் ஹெல்ப்லைன் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், புகார் அளித்தவரிடம் பேசி சரிசெய்த பின்னர் ஐந்து நாட்களுக்கு பிறகு புகார் மூடப்பட்டுள்ளது.
இறுதியான புகார் குறிப்பாக, ‘நீங்கள் CM ஹெல்ப்லைன் போர்ட்டலில் ஆன்லைனில் தாக்கல் செய்த புகார்/பரிந்துரையின் காரணமாக புகார் தீர்க்கப்பட்டது” என்று மூடப்பட்டுள்ளது. புரிந்துகொள்ளக்கூடிய வகையில், இந்த நகைச்சுவை புகாரை தீர்த்துவைத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM