கனமழை, வெள்ளம், புயல், பூகம்பம், எரிமலை வெடிப்பு, காட்டுத் தீ என ஏதாவதொரு இயற்கை சீற்றத்தை உலக நாடுகள் அவ்வபோது எதிர்கொண்டுதான் வருகின்றன.
இவற்றின் வரிசையில் மேற்கு பசிபிக் பெருங்கடலில் சில தினங்களுக்கு முன் சக்தி வாய்ந்த சூறாவளி புயல் உருவாகி இருந்தது. ஹன்னம்னோர் என்று பெயரிட்ட இப்புயல் சீனாவின் கிழக்குப் பகுதி, ஜப்பான் மற்றஉம் தென்கொரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
அதன்படியே, இந்திய நேரப்படி இன்று அதிகாலை தென் கொரியாவினன் தெற்கு கடற்கரை பகுதியான ஜெஜூ கடற்பரப்பை அடைந்த புயல், துறைமுக நகரமான பூசனுக்கு வடமேற்கில் கரையை கடந்தது.
புயல் கரையை கடந்தபோது, மணிக்கு சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதன் விளைவாக மின் கம்பங்கள் சரிந்து விழுந்தன; மரங்கள் வேரோடு பெயர்ந்து சாயந்தன. நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதமடைதுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு்ள்ளது. விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Typhoon Hinnamnor: சுழன்றடிக்க காத்திருக்கும் ஹின்னம்னோர் புயல்: நாளை கரையை கடக்கிறது!
தென்கொரியாவின் பூசன் நகரை ஒட்டியுள்ள பகுதிகளின் குடியிருப்புகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குடியிருப்புகள் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.
புயல், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் கொரியாவின் தெற்கு பகுதி முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.