2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான பிரயோக பரீட்சைகள் இம்மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்த நிலையில் பிரயோக பரீட்சைகளை மேலும் 5 நாட்கள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான பிரயோக பரீட்சைகள் தவிர்க்க முடியாத காரணங்களால் ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் இன்னும் இரண்டு மாதங்களில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட உள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.