தெற்காசிய நாடுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் பங்களாதேஷ் மின்சாரப் பற்றாக்குறையால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த மோசமான வேளையில் இப்பிரச்சனையைச் சமாளிக்கும் விதமாகக் கிழக்கு இந்திய பகுதியில் அமைந்திருக்கும் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையத்தில் இருந்து பங்களாதேஷ் நாட்டுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்யத் தொடங்க கௌதம் அதானி திட்டமிட்டுள்ளார்.
அதானி பவர் லிமிடெட் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள 1.6 ஜிகாவாட் அனல் மின் நிலையத்தை வைத்துள்ளது. இதில் இருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு ஏற்றுமதிக்கான பிரத்தியேக டிரான்ஸ்மிஷன் லைன்-ஐ டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் செயல்படுத்த கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
இலங்கையை போல நாங்கள் ஒரு போதும் வீழ்ச்சி காண மாட்டோம்.. பங்களாதேஷ் நம்பிக்கை!
கௌதம் அதானி
கௌதம் அதானி திங்கள்கிழமை பிற்பகுதியில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை டெல்லி-யில் சந்தித்துப் பேசிய பிறகு ட்விட்டரில் அந்நாட்டுக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் 1.6 ஜிகாவாட் அனல் மின் நிலையத்தில் இருந்து புதிய டிரான்ஸ்மிஷன் லைன் மூலம் மின்சார ஏற்றுமதி செய்யப்படுவது குறித்துப் பதிவிட்டார்.
புதிய வாய்ப்பு
இந்தியாவில் ஏற்கனவே மின்சாரப் பற்றாக்குறை இருக்கும் வேளையில் ஏற்றுமதி வர்த்தகம் மூலம் கூடுதலான மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை உருவாக்க வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்திய உள்கட்டமைப்பு
இந்தியாவில் இருக்கும் உள்கட்டமைப்பு பயன்படுத்தி அண்டை நாடுகளுக்கு உதவும் முக்கியத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதானி குழுமத்தின் துறைமுகம், இன்பராஸ்டக்சர் மற்றும் எனர்ஜி துறை வர்த்தகத்தை ஏற்கனவே இலங்கையில் விரிவாக்கம் செய்துள்ள நிலையில் தற்போது பங்களாதேஷ் நாட்டிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
உக்ரைன் – ரஷ்யா போர்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றின் விலை உயர்ந்தது காரணமாகப் பங்களாதேஷ் நாடு முழுவதும் எரிசக்தி பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
பங்களாதேஷ்
பங்களாதேஷ் மின்சார உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்ட புதை படிவ எரிபொருட்களை அதிகம் சார்ந்துள்ளது, மேலும் 2041 ஆம் ஆண்டளவில் அதன் மின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கி அதன் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை ஆதரிப்பதை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.
நிலக்கரி சுரங்கம்
இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் ஜார்கண்ட் ஒன்றாகும், ஆனால் இப்பகுதியில் இருக்கும் அனல் மின் நிலையம் முக்கியமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைப் பயன்படுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 2017 ஒப்புதல் ஆவணம் தெரிவிக்கிறது.
இறக்குமதி நிலக்கரி
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்து கடல் வழியாக நிலக்கரியை எடுத்துச் செல்லவும், பின்னர் ஆலைக்கு ரயிலில் கொண்டு செல்லவும் அதிகச் செலவாகும் என்பதால் அதானியின் திட்டம் பல காலமாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தற்போது மின்சார ஏற்றுமதி காரணமாக விலையை ஈடு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Gautam Adani to export power from Jharkhand Thermal Power plant Bangladesh
Gautam Adani to start exporting power from India, Adani power Gautam Adani to export power from new 1.6 gigawatt Jharkhand Thermal Power plant to Bangladesh பங்களாதேஷ்-க்கு மின்சார ஏற்றுமதி.. பட்டையைக் கிளப்பும் கௌதம் அதானி..!