டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் இதுவரை உலகில் எந்த ஆட்டோமொபைல் நிறுவனமும் கனவு காணாத வகையில் பிரம்மாண்ட விரிவாக்கப் பாதையில் அமைத்துள்ளார்
2030 ஆம் ஆண்டுக்குள் வருடத்திற்கு 2 கோடி டெஸ்லா கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற பிரம்மாண்ட இலக்கை எலான் மஸ்க் இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். இதுதான் டெஸ்லா-வின் வளர்ச்சிக்கு மையப்புள்ளியாக அமைந்துள்ளது, இந்த இலக்கை அடைய தேவையான விரிவாக்கம் தான் டெஸ்லா-வின் எதிர்காலம் அமைந்துள்ளது.
டெஸ்லா இந்த இலக்கை அடைந்துவிட்டால் உலக வாகனச் சந்தையில் தோராயமாக 20 சதவீதமாக இருக்கும். உண்மையில் இது சாத்தியமா..?
பங்களாதேஷ்-க்கு மின்சார ஏற்றுமதி.. பட்டையை கிளப்பும் கௌதம் அதானி..!
2 கோடி கார்கள்
ஒரு வருடத்திற்கு 2 கோடி கார்களை ஒரு நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனை செய்ய வேண்டும் என்று யாரேனும் சொன்னால் சிரிப்பார்கள், ஆனால் எலான் மஸ்க் சொன்னால் சிரிக்க மாட்டார்கள் சிந்திப்பார்கள்.
பேட்டரி உற்பத்தி
ஒரு வருடத்திற்கு 2 கோடி கார்களை உற்பத்தி செய்வது என்பது ஒரு சவாலாக இருந்தாலும் அதை உற்பத்தி தளத்தை உலக நாடுகள் முழுவதும் விரிவாக்கம் செய்வதன் மூலம் எளிதாகச் செய்ய முடியும். ஆனால் எலக்ட்ரிக் கார்கள் பொறுத்த வரையில் பேட்டரி உற்பத்தி தான் பெரிய தடையாக உள்ளது.
மாடல் Y பேட்டரிகள்
எலான் மஸ்க் தனது பேட்டரி தயாரிப்புத் தொழில்நுட்பம் மற்றும் அதன் திறனை மேம்படுத்துவதில் தான் அனைத்துமே அடங்கியுள்ளது. சமீபத்தில் எலான் மஸ்க் தனது பேட்டரி தொழில்நுட்பத்தில் செய்த மாற்றங்கள் மூலம் மாடல் Y பேட்டரிகளின் விலையைச் சுமார் 8 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.
திறன், விலை
ஆனால் இப்புதிய மாற்றத்தில் டெஸ்லா கார்களில் இருக்கும் பேட்டரிகளைப் பெரிதாகவும், electrodes-ஐ ட்ரை கோட்டிங் முறையிலும் செய்யப்பட்டு உள்ளது. இதன் திறன், விலை சிறப்பாக இருந்தாலும் மாஸ் ப்ரொடெக்ஷன் போது பெரிய பாதிப்பை எற்படுத்தும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பட்ஜெட் கார்
இதேவேளையில் டெஸ்லா தனது முக்கிய இலக்கான பட்ஜெட் விலை கார் அதாவது 25000 டாலருக்குக் கீழ் விலை கொண்ட காரை அறிமுகம் செய்வது. இதை எலக்ட்ரிக் கார்களின் உற்பத்தியில் பெரும் மதிப்பை கொண்டு இருக்கும் பேட்டரி உற்பத்தியில் குறைக்கப்பட்டால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும்.
எலான் மஸ்க் பணி
இதை அடையவே தற்போது எலான் மஸ்க் பல முக்கியமான திட்டங்களையும், தொழில்நுட்ப மாற்றங்களையும் செய்து வருகிறார். பேட்டரி தொழில்நுட்பத்தில் ஏற்படும் வெற்றி அடிப்படையாக வைத்து மஸ்க் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் தனது உற்பத்தி தளத்தை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டோயோட்டா
உலகிலேயே அதிகக் கார்களைத் தயாரிக்கும் நிறுவனம் என்றால் இது டோயோட்டா தான், வருடத்திற்குச் சுமார் 80 லட்சம் கார்களைத் தயாரித்து விற்பனை செய்துள்ளது. ஆனால் தற்போது எலான் மஸ்க் கூறுவது தனது சொந்த உற்பத்தி அளவை காட்டிலும் 13 மடங்கு அதிகமானது.
Elon Musk goal of selling 2 crore tesla cars in a year, Is that really possible..?
Elon Musk goal of selling 2 crore tesla cars in a year, Is that really possible..? எலான் மஸ்க்-கிற்குப் பித்துப் பிடித்துள்ளதா..? வருடத்திற்கு 2 கோடி டெஸ்லா கார் உற்பத்தி இலக்கு..!!