டொலர்களில் கொள்வனவு செய்பவர்களுக்கு பத்து வீத சலுகை

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டத்தில் உள்ள வீடுகளை அமெரிக்க டொலர்களில் கொள்வனவு செய்பவர்களுக்கு பத்து வீத சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்கள் டொலர்களில் பணம் செலுத்தி அந்தந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுபோன்ற இரண்டு நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களின் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. பொரளையில் 608 வீடுகளும் அங்கொடையில் 500 வீடுகளும் உள்ளன.

மேலும் 12 நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களினூடாக 3,667 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.