ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை!


ஆசிய கோப்பை 2022 தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

ஆசிய கோப்பை 2022 தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் முதன்முறையாக மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாயிற்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான. ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் இன்றைய போட்டி இந்தியாவிற்கு முக்கியமனதாக இருந்தது.

ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை! | Asia Cup2022 Sri Lanka Won India By6 Wickets

இந்த நிலையில், முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 6 ஓட்டங்களிலும் விராட் கோலி ஓட்டம் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர். சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 72 ஓட்டங்கள் சேர்த்தார்.

பின்னர் சூர்யா குமார் யாதவ் 34 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் யாரும் சோபிக்காத காரணத்தால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, இலங்கை அணி 174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை! | Asia Cup2022 Sri Lanka Won India By6 Wickets

தொடக்க வீரர்கள் பாத்தும் நிஸ்ஸங்க மற்றும் குஷல் மெண்டிஸ் இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். பாத்தும் நிஸ்ஸங்க 52 ஓட்டங்களும், குஷால் மெண்டிஸ் 57 ஓட்டங்களும் சேர்த்து அவுட்டாகினர்.

இதையடுத்து போட்டி பரபரப்பாக சென்றது. இறுதி ஓவரில் 6 பந்துகளுக்கு 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இலங்கை அணி இலக்கை எட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை! | Asia Cup2022 Sri Lanka Won India By6 Wickets

இலங்கை அணி ஆப்கானிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியதன் மூலம் ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தொடரை விட்டு வெளியேறும் என்பது குறிப்பிடதக்கது.

ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை! | Asia Cup2022 Sri Lanka Won India By6 Wickets



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.