குட்டி ஸ்டோரி சொல்றேன்னு இப்படி கும்மி அடிச்சிட்டியே.. ’வி’ நடிகரின் பேச்சால் கடுப்பான வேர்ல்ட்!

சென்னை: மூத்த நடிகரை வரிசையாக பலரும் பாராட்டி வந்த நிலையில், மேடையேறிய அந்த ‘வி’ நடிகர் வஞ்சப் புகழ்ச்சி அணி போல வச்சு செய்து விட்டதாக ட்ரோல்கள் குவியத் தொடங்கி உள்ளன.

‘வி’ நடிகர் பேச ஆரம்பித்ததில் இருந்தே மூத்த நடிகரின் ரியாக்‌ஷன்கள் முற்றிலுமாக மாறியதையும் சுட்டிக் காட்டி கலாய்த்து வருகின்றனர்.

நடிகரின் அந்த குட்டி ஸ்டோரியால் வேர்ல்ட் நடிகர் ரொம்பவே கடுப்பாகி விட்டதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

பாராட்டு மழை

என்ன விழா என்றே தெரியாத அளவுக்கு மேடை ஏறிய பலரும் அந்த மூத்த நடிகரை பாராட்டித் தள்ளினர். அதற்கு காரணம் சமீபத்தில் வெளியான அந்த நடிகரின் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றி தான். ஆனால், அந்த வெற்றியால் ரொம்பவே கஷ்டப்பட்டது போட்டி நடிகர் கூட இல்லையாம் அந்த ‘வி’ நடிகர் தானாம்.

பெயர் போயிடுச்சே

பெயர் போயிடுச்சே

‘வி’ நடிகரின் பெயரை போட்டாலே அந்த மூத்த நடிகர் நடித்த படம் தான் கூகுள் முதல் கொண்டு அனைத்திலும் வருவதை பார்த்து ரொம்பவே அப்செட் ஆகி இருந்த அந்த நடிகரும் மேடை ஏறிய நிலையில், பாராட்டும் சாக்கில் ஒரு வாங்கு வாங்கி விட நினைத்து அப்படியொரு யாருக்கும் தெரியாத குட்டி ஸ்டோரியை சொல்லி விட்டார்.

நிஜப் பெயர்

நிஜப் பெயர்

இதுவரை நடிகரின் நிஜப் பெயர் என்னவென்றே தெரியாத பலருக்கும் ‘வி’ நடிகர் தனக்குள் இருந்த காண்டு காரணமாக ஒரு மூத்த நடிகர் என்றும் பாராமல் அவரது அனுமதியையும் பெறாமல் அவரது நிஜப் பெயரை கூட்டத்தில் கட்டு சோத்தை அவிழ்த்ததை போல அவிழ்த்துள்ளார்.

கடுப்பான வேர்ல்ட்

கடுப்பான வேர்ல்ட்

நடிகரின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய ட்ரோல் மெட்டீரியலாகும் என அவர் பயந்ததை போலவே உச்ச நடிகர் ரசிகர்கள் ஏகப்பட்ட மீம்களை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில், மேடையில் பேசி முடித்து விட்டு இறங்கியதுமே ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லி இருக்கலாமே என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் அந்த நடிகர் என பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

வி நடிகருக்கு பதிலடி

வி நடிகருக்கு பதிலடி

அதுதான் பிரச்சனைன்னா, உங்களோட நிஜப் பெயரும் அது இல்லையே என்றும் நடிகர் போகிற போக்கில் அந்த வி நடிகரை போட்டு பொளந்து விட்டாராம். மேலும், தன்னை போல நடிக்க முயற்சி பண்ணால் மட்டும் போதாது நல்ல கதையை கேட்டு நடிக்க வேண்டும் என்றும் மறைமுகமாக அட்வைஸ் கொடுத்து விட்டு சென்றார் என பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.