சென்னை
:
நடிகர்
விஜய்
தற்போது
தனது
66
படத்திற்காக
பிரபல
தெலுங்குப்பட
இயக்குநர்
வம்சி
படிப்பள்ளி
இயக்கத்தில்
இணைந்துள்ளார்.
இவரது
இயக்கத்தில்
கார்த்தி,
நாகார்ஜுனா
உள்ளிட்டவர்கள்
நடிப்பில்
முன்னதாக
வெளியான
தோழா
படம்
சிறப்பான
வரவேற்பை
பெற்றது.
இந்நிலையில்
தற்போது
வாரிசு
படத்தின்
சூட்டிங்
நிறைவுக்
கட்டத்தை
எட்டியுள்ளது.
பொங்கலுக்கு
இந்தப்
படம்
ரிலீசாக
உள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
நடிகர்
விஜய்
நடிகர்
விஜய்
தன்னுடைய
ரசிகர்களுக்கு
தொடர்ந்து
சிறப்பான
படங்களை
கொடுத்து
வருகிறார்.
புதிய
இயக்குநர்களுக்கும்
வாய்ப்புகளை
கொடுத்து
வருகிறார்.
இதையொட்டியே
நெல்சன்
திலீப்குமாருக்கு
பீஸ்ட்
படத்தின்
வாய்ப்பை
அவர்
கொடுத்திருந்தார்.
ஆனால்
பீஸ்ட்
படம்
கலவையான
விமர்சனங்களையே
பெற்றிருந்தது.
![பீஸ்ட் படம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/1662514211_121_xbeast-1648899618-jpg-pagespeed-ic-korts6yeqc-1652200080.jpg)
பீஸ்ட்
படம்
நெல்சனின்
முந்தைய
படங்களான
கோலமாவு
கோகிலா,
டாக்டர்
படங்கள்
அவரது
இயக்கத்தில்
சிறப்பான
விமர்சனங்களை
பெற்றது.
ஆனால்
பீஸ்ட்
அந்தப்
பெயரை
பெற
தவறிவிட்டது.
ஆயினும்
பீஸ்ட்
படம்
வசூல்ரீதியாக
கைக்கொடுத்தது.
இது
விஜய்
என்னும்
சிறந்த
நடிகருக்கான
சிறப்பாகவே
பார்க்கப்படுகிறது.
![90% வாரிசு சூட்டிங் நிறைவு](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/varisu774-1658403020.jpg)
90%
வாரிசு
சூட்டிங்
நிறைவு
இந்நிலையில்
தற்போது
விஜய்
தனது
66வது
படமான
வாரிசு
படத்தின்
சூட்டிங்கில்
90
சதவிகிதத்தை
முடித்துள்ளார்.
இந்தப்
படத்தில்
ராஷ்மிகா
மந்தனா
அவருக்கு
ஜோடி
சேர்ந்துள்ள
நிலையில்,
சரத்குமார்,
ஷாம்,
பிரகாஷ்ராஜ்,
பிரபு,
ஜெயசுதா,
குஷ்பூ,
ராதிகா
உள்ளிட்ட
ஏராளமான
நட்சத்திரப்
பட்டாளமே
நடித்துள்ளது.
![லீக்கான படத்தின் காட்சிகள்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/1662514213_514_collage-1659608941.jpg)
லீக்கான
படத்தின்
காட்சிகள்
இந்தப்
படத்தின்
பல
புகைப்படங்கள்
மற்றும்
வீடியோக்கள்
சமூக
வலைதளங்களில்
லீக்காகி
ரசிகர்களுக்கு
அதிர்ச்சிக்
கொடுத்தது.
இதையடுத்து
சூட்டிங்
தற்போது
மிகுந்த
பாதுகாப்புடன்
நடத்தப்பட்டு
வருகிறது.
படத்தின்
சூட்டிங்
90
சதவிகிதம்
நிறைவடைந்துள்ள
நிலையில்
விரைவில்
சூட்டிங்
முற்றிலுமாக
முடிக்கப்பட்டு
போஸ்ட்
புரொடக்ஷன்
பணிகள்
துவங்கவுள்ளன.
![அடுத்த வாரத்தில் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்?](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/1662514214_584_varisuhome-1655815354-1656058735-1657968126.jpg)
அடுத்த
வாரத்தில்
பர்ஸ்ட்
சிங்கிள்
அப்டேட்?
முன்னதாக
படத்தின்
டைட்டில்
மற்றும்
போஸ்டர்கள்
விஜய்
பிறந்தநாளையொட்டி
வெளியான
நிலையில்,
தொடர்ந்து
படத்தின்
எந்த
அப்டேட்டும்
வெளியாகாமல்
உள்ளது.
இந்நிலையில்
அடுத்த
வாரத்தின்
இறுதியில்
படத்தின்
முதல்
சிங்கிள்
குறித்த
அறிவிப்பு
வெளியாகவுள்ளதாக
தகவல்கள்
வெளியாகியுள்ளன.
![தளபதி 67 படம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/1662514215_772_vijay-lokesh-kanagaraj-thalapathy-67-1634233802-1655911974.jpg)
தளபதி
67
படம்
இந்தப்
படத்தை
தொடர்ந்து
வரும்
அக்டோபரில்
தளபதி
67
படத்தில்
லோகேஷ்
கனகராஜுடன்
விஜய்
இணையவுள்ளதாக
கூறப்பட்டுள்ளது.
இந்தப்
படம்
அடுத்த
ஆண்டில்
ரிலீசாக
உள்ளது.
படத்தில்
விஜய்
முதல்முறையாக
கேங்ஸ்டராக
நடிக்கவுள்ளதாக
முன்னதாக
லோகேஷ்
கனகராஜ்
தெரிவித்துள்ளார்.
![வாரிசு பொங்கல் ரிலீஸ்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/09/newproject-2022-06-22t113053-788-1655877674.jpg)
வாரிசு
பொங்கல்
ரிலீஸ்
இந்நிலையில்
பொங்கல்
ரிலீசாக
வெளியாகவுள்ள
வாரிசு
படத்தின்
சூட்டிங்
ஏறக்குறைய
நிறைவடைந்து
அடுத்ததாக
பர்ஸ்ட்
சிங்கிள்
வெளியாகவுள்ளதும்
ரசிகர்களிடையே
உற்சாகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
இந்தப்
படத்தில்
குடும்ப
சென்டிமெண்ட்டை
பயன்படுத்தி
கதைக்களம்
அமைக்கப்பட்டுள்ளதாக
முன்னதாக
படத்தின்
தயாரிப்பாளர்
தெரிவித்துள்ளார்.