மும்பை: உலகில் போக்குவரது நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மும்பை உள்ளது. பெங்களூரு (5), டெல்லி (6) ஆகிய நகரங்களும் முதல் 10 நகரங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.
உலக நகரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக ‘கோஷார்ட்லி’ என்றஅமைப்பு ஆய்வு மேற்கொண்டது. இதில் போக்குவரத்தில் உலகின் மிக நெரிசலான நகரகமாக துருக்கி நாட்டின் இஸ்தான்புல் உள்ளது. கொலம்பியா தலைநகர் பொகோட்டா இரண்டாமிடம் பிடித்துள்ளது. ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் 4-ம் இடத்தில் உள்ளது.