வாஷிங்டன், வங்கிக் கணக்கில், தவறுதலாக 4 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டதை தொடர்ந்து, சாமானியர் ஒருவர், உலக பணக்காரர்கள் பட்டியலில், 25வது இடத்தில், ஒரு சில மணி நேரங்கள் இடம்பெற்ற சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியது.அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தை சேர்ந்தவர் டாரன். இவர், போலீஸ் துறையில் சில காலம் பணியாற்றியதாக கூறப்படுகிறது.
இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான இவர், சாதாரண நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், டாரனின் வங்கியில் இருந்து, அவரது மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று சமீபத்தில் வந்தது. அதில், டாரனின் வங்கி கணக்கில், 4 லட்சம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதை கண்டதும் அவர் பதறிப்போனார். உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு விபரத்தை கூறினார். இதையடுத்து, அவரது வங்கி கணக்கு மூன்று நாட்களுக்கு முடக்கப்பட்டு, பின் அந்த தொகை திரும்பப் பெறப்பட்டது. வங்கி செய்த தவறால், இந்த பெரும் தொகை அவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது.டாரனின் வங்கி கணக்கில், 4 லட்சம் கோடி ரூபாய் சில மணி நேரங்கள் இருந்ததை அடுத்து, உலக பணக்காரர்கள் பட்டியலில், 25வது இடத்தில், ஒரு சில மணி நேரங்கள் அவர் இடம்பெற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement