இந்தியாவில் ஒரே நாளில் 5,379 பேருக்கு கொரோனா… 27 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 5,379 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,44,72,241 ஆக குறைந்தது.

* புதிதாக 27 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,057 ஆக உயர்ந்தது.

* குணமடைந்தோர் எண்ணிக்கை 4,38,93,590 -ஆக உயர்ந்துள்ளது.

* நாட்டில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 55,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.70% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.19% ஆக குறைந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.11% ஆக குறைந்துள்ளது.

*இந்தியாவில் 2,13,91,49,934 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 18,81,319 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.