டி.ஐ. க்ளீன் மொபிலிட்டி நிறுவனம் சார்பில் மோன்ட்ரா எலெக்ட்ரிக் 3W ஆட்டோ அறிமுகம்

சென்னை: முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஐ க்ளீன் மொபிலிட்டி நேற்று சென்னையில் மோன்ட்ரா எலெக்ட்ரிக் 3Wஆட்டோவை அறிமுகப்படுத்தியது.

சென்னை, அம்பத்தூரில் உள்ள டிஐ க்ளீன் மொபிலிட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆட்டோ விற்பனையை நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மோன்ட்ரா எலெக்ட்ரிக் 3W ஆட்டோவின் விலைஅரசு மானியம் போக ரூ.3.02 லட்சத்தில் (எக்ஸ் ஷோரூம்) தொடங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 100-க்கும் அதிகமான டீலர்கள் மூலம் இதை வாங்க முடியும்.

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா செயல் தலைவர் அருண் முருகப்பன் கூறும்போது, “மோன்ட்ரா எலெக்ட்ரிக் ஆட்டோ எங்களுக்கான புதிய வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பை குறிக்கும். மோன்ட்ரா எலெக்ட்ரிக் ஆட்டோ மூலம் நாங்கள் காற்று மாசுபாட்டை போக்க கடும் முயற்சிசெய்கிறோம். 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் முயற்சியில் இந்த பிரிவு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இப்புதிய ஆட்டோ குறித்தவாடிக்கையாளர்களின் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளோம்” என்றார்.

டிஐ க்ளீன் மொபிலிட்டி நிர்வாகஇயக்குநர் கே.கே.பால் கூறும்போது, “மோன்ட்ரா எலெக்ட்ரிக் 3W ஆட்டோ புதுமை மற்றும் தொழில் துறையில் முதன்மையான அம்சங்களை கொண்டுள்ளது. இதில் உள்ள 10 கி.வாட் பேட்டரி மூலம் 197 கி.மீ. தூரம் செல்ல முடியும். மணிக்கு 55 கி.மீ வேகம், 60Nm முறுக்கு திறன், மல்டி டிரைவ் முறைகள், பார்க் அசிஸ்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிறைந்ததாகவும் இருக்கும்.

டிஜிட்டல் ஃபைனான்சிங், 24 மணிநேர சாலையோர உதவி, 2 வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாத விருப்பம், 3 ஆண்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு வசதி போன்றவையும் வழங்கப்படும்.

இவ்வாறு முருகப்பா குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.