அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு செப்டம்பர் 2ஆம் தேதி வழங்கிய தீர்ப்பு
தரப்புக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என உத்தரவு வெளியாகியுள்ளதால், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சட்ட சிக்கல் இல்லை.
ஜூலை 11ஆம் தேதி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
சீலை அகற்ற கோரி ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பும் உயர் நீதிமன்றத்தை நாடின. அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சாவியை ஒப்படைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. சி.வி.சண்முகம் அலுவலகத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து பார்வையிட்டார்.
பொதுக்குழுவுக்கு எதிராக தொடரபப்ட்ட வழக்கு விசாரணையும் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததால் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்துக்கு செல்லாமல் தவிர்த்து வந்தார்.
செப்டம்பர் 2ஆம் தேதி இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாக அமைந்ததால் நாளை (செப்டம்பர் 8) ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்ல உள்ளார். அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.
அடுத்தடுத்த நகர்வுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக அமைந்துள்ளதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஓபிஎஸ் தரப்பு ஆலோசித்து வருகிறது.