புனே :மஹாராஷ்டிராவில் கழலை நோய் தாக்குதலில், 22 மாடுகள் பரிதாபமாக பலியாகியுள்ளன. கால்நடைகளை, குறிப்பாக மாடுகளை தோல் கழலை என்ற நோய் தாக்குகிறது. இந்த நோயால் மாடுகளின் தோலில் கட்டி உருவாகி, அவற்றுக்கு காய்ச்சல் ஏற்பட்டு, உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.சமீபகாலமாக ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல், உத்தரகண்ட், ஜம்மு – காஷ்மீர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கால்நடைகளுக்கு இந்த நோய் பரவி வருகிறது. இந்நிலையில், மஹாராஷ்டிராவிலும் இந்த நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மஹாராஷ்டிராவில் மட்டும் 22 கால்நடைகள் இந்த நோயின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளன. இதையடுத்து மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
புனே :மஹாராஷ்டிராவில் கழலை நோய் தாக்குதலில், 22 மாடுகள் பரிதாபமாக பலியாகியுள்ளன. கால்நடைகளை, குறிப்பாக மாடுகளை தோல் கழலை என்ற நோய் தாக்குகிறது. இந்த நோயால் மாடுகளின் தோலில் கட்டி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்