அனிதா ராதாகிருஷ்ணன் செல்வாரா? திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா? கனிமொழிதான் சொன்னாங்க.. பாஜக பொளேர்

திருச்செந்தூர்: திராவிட மாடல் ஆட்சி என்றால் லஞ்சம், ஊழல் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் குற்றச்சாட்டியுள்ளார்.

பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தற்காலிக மார்க்கெட் அமைய உள்ள இடத்தையும், புதியதாக மார்க்கெட் கட்டப்படுவதையும் பார்வையிட்ட பிறகு வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: ராகுல் காந்தி இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொள்வதால், பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றி தான். எட்டு வழி சாலை திட்டத்தில் திமுக அந்தர்பல்டி அடிக்கிறது.

பெட்ரோல் டீசல்

பெட்ரோல் டீசல் விலையை கடந்த சில மாதங்களில் ரூ.15 வரை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால் ரூ.5 குறைப்போம் என சொல்லிய திமுக ஏன் இதுவரை குறைக்கவில்லை, சொன்னதை செய்யவில்லை. ஒன்றரை வருடங்களில் திமுக சாதித்தது என்ன? இதுவரை எந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்யவில்லை.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

அதனால் தான் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல தியாகராஜனுக்கு பொருளாதாரம் தெரியவில்லை என சொல்கிறேன். நாள்தோறும் வெளியூர்களில் இருந்து சுமார் 30,000 பேர் வந்து செல்லக் கூடிய திருச்செந்தூரில் எந்த அடிப்படை வசதிகளையும் செய்யவில்லை. இந்த அரசாங்கம் எல்லாவற்றிலும் தோல்வி அடைந்த அரசாங்கமாக உள்ளது.

 திருச்செந்தூர் நகராட்சி

திருச்செந்தூர் நகராட்சி

திருச்செந்தூர் நகராட்சியில் எரி தகன மேடை அருகே தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டு வருகிறது. உணவுக்காக காய்கறி வாங்க செல்லக் கூடியவர்கள் இங்கு எப்படி செல்வார்கள். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செல்வாரா? அவரது தொகுதிக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் துரோகம் செய்யாமல் இருந்தால் போதும்.

திமுகவிடம் நல்லது இல்லை

திமுகவிடம் நல்லது இல்லை

ஏனென்றால் திமுகவிடம் நல்லதை எதிர்பார்க்க முடியாது.
திருச்செந்தூர் நகராட்சி சார்பில் எரிதகன மேடை அருகில் தற்காலிக மார்க்கெட் அமைக்காமல் மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாயகர் சதுர்த்தி பற்றி கொஞ்சம் கூட பொது அறிவு இல்லாமல், தரம் தாழ்த்தி பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் முத்தரசனை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பெண்கள் மீது அக்கறை

பெண்கள் மீது அக்கறை

பெண்கள் மீது அக்கறை உள்ள தமிழக அரசு மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு பதிலாக மதுபான கடைகளை மூட வேண்டும். அதிகமாக இளம் பெண் விதவைகள் தமிழகத்தில் உள்ளார்கள் என நாங்கள் சொல்லவில்லை. கனிமொழி எம்பியே கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து குற்றங்கள் அதிகமாக நடந்து வருகிறது. மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு அரசு மதுபானங்களை விற்பது தான் காரணம் இதனை மாற்றிக் கொள்ள வேண்டும், இல்லையென்றால் மாற்றப்படுவார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்திய காங்கிரஸ் கட்சியுடன் ஏன் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளார்.

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் வேண்டும் என அம்பேத்கர் சொன்னார், மொழி வாரியான மாநிலங்கள் இந்த நாட்டிற்கு கேடானது எனவும் சொன்னார் இதனை திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா? திராவிட மாடல் ஆட்சி என்றால் லஞ்சம், ஊழல் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என குற்றம் சாட்டினார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.