தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் பட்டாசுகள் விற்பனைக்கு அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் விடுத்துள்ள செய்தியில், கிடங்குகளில் பட்டாசுகள் பதுக்கி வைப்பது, விற்பனை மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளை வெடிக்க முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.