17 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று
கனமழை
பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (07.09.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

08.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09.09.2022 முதல் 11.09.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்)

விழுப்புரம் (விழுப்புரம்), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), கேதர் (விழுப்புரம்) தலா 9, அறந்தாங்கி (புதுக்கோட்டை), அரிமளம் (புதுக்கோட்டை), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), கோலியனூர் (விழுப்புரம்), கடவனூர் (கள்ளக்குறிச்சி) தலா 7, கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), திருப்பத்தூர் (திருப்பத்தூர்), நடுவட்டம் (நீலகிரி), பந்தலூர் (நீலகிரி), வல்லம் (விழுப்புரம்), முகையூர் (விழுப்புரம்) தலா 6, திருப்பத்தூர் PTO (திருப்பத்தூர்), வேலூர் (வேலூர்), காரைக்குடி (சிவகங்கை), தேவகோட்டை (சிவகங்கை), ஆரணி (திருவண்ணாமலை), காட்பாடி (வேலூர்), கிளானிலை (புதுக்கோட்டை), வம்பன் KVK (புதுக்கோட்டை) தலா 5,

டேனிஷ்பேட்டை (சேலம்), சோலையார் (கோவை), மேலாளத்தூர் (வேலூர்), திருவையாறு (தஞ்சாவூர்), சின்னக்கல்லார் (கோவை), கிளென்மார்கன் (நீலகிரி), விருதாச்சலம் (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), செருமுள்ளி (நீலகிரி), குப்பநத்தம் (கடலூர்), ஆயின்குடி (புதுக்கோட்டை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வடகுத்து (கடலூர்) தலா 4,

தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), வீரகனூர் (சேலம்), மானாமதுரை (சிவகங்கை), கொடைக்கானல் (திண்டுக்கல்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), பேரையூர் (மதுரை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை, மேல் பவானி (நீலகிரி), மணல்மேடு (மயிலாடுதுறை), மதுரை விமான நிலையம் (மதுரை), சூரப்பட்டு (விழுப்புரம்), கொடநாடு (நீலகிரி), கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), நகுடி (புதுக்கோட்டை), கெத்தண்டப்பட்டி (திருப்பத்தூர்), மணம்பூண்டி (கள்ளக்குறிச்சி) தலா 3,

பெலாந்துறை (கடலூர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), பூண்டி (திருவள்ளூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), உதகமண்டலம் (நீலகிரி), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), காட்டுக்குப்பம் ARG (காஞ்சிபுரம்), திருத்தணி (திருவள்ளூர்), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), அவலாஞ்சி (நீலகிரி), தேவாலா (நீலகிரி), ஸ்ரீமுஷ்ணம் (நீலகிரி), வால்பாறை PTO (கோவை) தலா 2,

சேத்தியாத்தோப்பு (கடலூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), ஆலங்குடி (புதுக்கோட்டை), திருமயம் (புதுக்கோட்டை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), நத்தம் (திண்டுக்கல்), கூடலூர் பஜார் (நீலகிரி), ஜெயம்கொண்டம் (அரியலூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), நெய்வேலி AWS (கடலூர்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), பெரியார் (தேனி), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), திருக்கோவிலூர் ARG (கள்ளக்குறிச்சி), தஞ்சாவூர் PTO (தஞ்சாவூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), பவானிசாகர் (ஈரோடு), குடியாத்தம் (வேலூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), புதுச்சேரி, செங்கம் (திருவண்ணாமலை), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), சூளகிரி (கிருஷ்ணகிரி), தளி (கிருஷ்ணகிரி), எமரலாடு (நீலகிரி), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), அரியலூர் (அரியலூர்), ஏற்காடு (சேலம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), சோளிங்கர் (இராணிப்பேட்டை), தாளவாடி (ஈரோடு), ஆம்பூர் (திருப்பத்தூர்), பாபநாசம் (திருநெல்வேலி), தேக்கடி (தேனி) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

07.09.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

08.09.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

09.09.2022: லட்சத்தீவு பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தெற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

10.09.2022: கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தெற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

11.09.2022: தெற்கு வங்கக்கடல் மற்றும் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மத்திய வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.