புதுடெல்லி: கனடா நாட்டின் அடுத்த இந்திய தூதராக சஞ்சய் வர்மாவையும், தென்கொரியாவுக்கான இந்திய தூதராக அமித் குமாரையும் வெளியுறவுத் துறை அமைச்சகம் நியமித்துள்ளது.
சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 1988-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர் சஞ்சய்வர்மா. தற்போது ஜப்பான் நாட்டிற்கான இந்திய தூதராக உள்ளார். அவர் கனடாவிற்கான இந்திய தூதராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்சீனா, வியட்நாம், துருக்கி, இத்தாலி தூதரகங்களிலும் பணியாற்றி உள்ளார்.
கடந்த 1995-ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரி அமித் குமார். இவர் கான்பூர் ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் முடித்தவர். இவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் தூதராக பணியாற்றுகிறார். இவர் தென் கொரியாவுக்கான இந்திய தூதராக வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமனம் செய்துள்ளது. அமித் குமார் இதற்கு முன்பு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராக பணியாற்றியுள்ளார்.