சென்னை : இயக்குநர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் டிரைலர் நீண்ட எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியானது.
இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ். விக்ரம் பிரபு, ஜெயராம், ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷிமி,பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
பிரம்மிப்பில் ஆழ்த்திய டிரைலர்
தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம்,இந்தி என பான் இந்தியப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. கமலஹாசனின் கர்ஜனை குரலில் வெளியான ட்ரைலர் ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தி உள்ளது. நேற்று இரவு வெளியான டிரைலர் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.
கமல் பேச்சு
நேற்று நடந்த இசை விழாவில் ரஜினிகாந்த், கமலஹாசன், ஷங்கர் என பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். படத்தின் டிரைலர் கமல்ஹாசன் வெளியிட்டு, இந்த படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நான் நடிக்க ஆசைபட்டேன் ஆனால், அது முடியாமல் போனது, வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்திக்கு வாழ்த்துக்கள் என்றார்.
இந்தி தெரியாது
முன்னதாக இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய பார்த்திபன் தனக்கே உரிய குசும்புடன் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் கன்னடத்தில் வணக்கம் சொன்ன பார்த்திபன்,இந்தியிலேயே எனக்கு இந்தி தெரியாது என்றார். இதை பார்த்துக்கொண்டிருந்த அரங்கே கை தட்டி ஆரவாரம் செய்தது. இந்த நகைச்சுவைக்கு கமலும்,ரஜினியும் கைதட்டி சிரித்தனர்.
செம டஃப் கொடுப்பார்
தொடர்ந்து பேசிய பார்த்திபன், இது ஒரு சரித்திரநாள் 1955ம் ஆண்டு வெளியான ஒரு சரித்திர புத்தகம் இன்று ஒரு திரைப்படமாக மாறியிருக்கிறது. அதில் நானும் ஒரு சிறுபங்காக இருப்பதில் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். மணிரத்தினம் ஷூட்டிங்கை தொடங்கினா எப்போ முடிப்பாருனே தெரியாது அந்த அளவுக்கு நடிகர்களுக்கு செம டஃப் கொடுப்பாரு.
மணிரத்தினம் மட்டம் தட்டினார்
என்னத்தான் ஷூட்டிங் நைட் அண்ட் டே நடந்தாலும், மணிரத்னத்தின் எனர்ஜியை பார்க்கும் ஒரு உற்சாகம் பிறக்கும். அந்த உற்சாகத்தை அப்படியே முகத்தில் கொண்டு வந்து ஒரு எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்தா? இவ்வளவு எக்ஸ்பிரஷன்ஸ் எடுத்து குறைச்சுச்கோ என்று மணிரத்தினம் மட்டம் தட்டினார். மட்டம் தட்டினார் என்றால் குறைத்து சொல்வது இல்லை செங்கலை சமப்படுத்துவதற்கு மட்டம் தட்டுவாங்களே அதுபோல நடிகர்களை மட்டம் தட்டினார் என்றார்.