ஸ்டாலினுக்கு விமானத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த பெண்… அப்படியே கொட்டிய 90ஸ் வசனங்கள்…!

தமிழக முதல்வர்

இன்றைய தினம் விமானத்தில் பயணித்த போது நடந்த நிகழ்வு மிகுந்த சுவாரஸியத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார்.

அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சென்றனர். விமான பயணத்தின் போது தனது இருக்கையில் அமர்ந்திருந்த போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அருகில் பெண் ஒருவர் வந்தார். அவர் வங்கி மேலாளராக பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 1990களில் ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற நாடகம் ஒன்றில் தான் நடித்த காட்சியை அப்படியே நடித்து காண்பிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதற்கு முதல்வரும் அனுமதி அளித்திருக்கிறார். பின்னர் வசனங்களை அடுக்கடுக்காக பேசிக் கொண்டே போனார்.

இறுதியில் ”தரணி போற்றும் அளவிற்கு எங்கள் தமிழ்நாட்டை நடத்திச் செல்வது எங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆற்றலுள்ள அரசு” என்று கூறி முடித்துக் கொண்டார். இதை மிகுந்த ஆர்வத்துடன் மு.க.ஸ்டாலின் கேட்டார். இறுதியில் அந்த பெண் மேலாளருக்கு கைகொடுத்து முதல்வர் பாராட்டினார். உடனே அவர் முகம் மலர்ந்து மிகவும் மகிழ்ந்து போனார்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வங்கி ஒன்றில் பணிபுரியும் அந்த பெண் மேலாளரின் பெயர் கவுசல்யா என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

எனக்கு வாய் நீளமா? சீறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

இதற்கான ஏற்பாடுகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தெற்கு மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர். விமான நிலையத்தில் இருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்கிறார். எனவே முக்கிய சந்திப்புகளில் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.