தனிநபர் கடன்கள்..!
வீட்டுக் கடனுக்கு அடுத்தபடியாக தனிநபர் கடன்கள் மற்றும் ஃபிக்சட் டெபாசிட்டுகள் மேல் வழங்கப்படும் கடன்கள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு வருடத்தில் வங்கிகள் மிக அதிக அளவில் தனிநபர் கடன்கள் வழங்கியுள்ளது.
சென்ற ஒரு வருடத்தில் தனி நபர் கடன்களின் வளர்ச்சி 16.5% அளவில் உள்ளது. இதே காலகட்டத்தில் வீட்டு கடன்களின் வளர்ச்சி 5% ஆக உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக கிரெடிட் கார்டுகள் மீது வழங்கப்படும் கடன்களின் அளவு ரூ. 1.6 லட்சம் கோடியாக உள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இது 1.3 லட்சம் கோடியாக கிரெடிட் கார்டு கடன்கள் இருந்தது. இதன் மூலம் கிரெடிட் கார்டுகளின் மூலம் கடன்கள் பெறுவது அதிக அளவில் இருப்பது தெரிகிறது.
இன்ஃப்ரா துறை..!
பொதுவாக கிரெடிட் கார்டுகள் மூலம் பெறும் கடனுக்கு வட்டி மிக அதிக அளவில் வசூலிக்கப்படுகிறது. இந்த வகை கடன்கள் ரிஸ்க் அதிகம் உடையவை என்றாலும் அதிக வருமானத்தை வங்கிகளுக்கு வழங்குகிறது.
அதனால் தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்ட் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் விரும்புவதன் காரணமாக இந்த வகை கடன்கள் மிக அதிக அளவில் உயர்ந்து வருகின்றன.
மேலும் வங்கிகள் தனிநபர்களுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பலத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு கடன்களை வழங்கியுள்ளன. அந்த வகையில் வங்கிகள் வழங்கி உள்ள கடன்களில் இன்ஃப்ரா துறை சார்ந்த நிறுவனங்கள் மிக அதிக அளவில் 38% வரை கடன்களை பெற்றுள்ளன.
அதற்கு அடுத்தபடியாக மின்சாரத்துறை சார்ந்த நிறுவனங்கள் 20% வரை கடன் பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சாலை கட்டுமான நிறுவனங்கள் 8% என்ற அளவிற்கும், டெலிகாம் துறை சார்ந்த நிறுவனங்கள் 4% என்ற அளவிற்கும் வங்கிகளிடமிருந்து கடன் பெற்றுள்ளன.
இந்தத் தரவுகளின் மூலம் வங்கிகள் கடன்களை வழங்குவது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவது புலனாகிறது. மேலும் மக்களிடம் கடன்கள் பெறும் வழக்கம் அதிகரித்து உள்ளதை இது காட்டுகிறது. கடன் என்பது கூர்மையான கத்தி போன்றது ஆகும். அதனை வளர்ச்சிக்கு பயன்படுத்தும் பொழுது கூடுதல் பலன்களை ஒருவருக்கு கடன் வழங்கும். சரியாக கையாளாகாத கடன்கள் ஒருவரை மீளாத் துயரில் ஆழ்த்தி விடும். இதனை உணர்ந்து கடன்களை பெறுவது மிகவும் அவசியம் என்பதை ஒவ்வொரு வாசகரும் உணர வேண்டும்.
வங்கிகள், மிக அதிக அளவில் தனிநபருக்கான வீட்டுக் கடன்களை வழங்கி உள்ளதாக சென்ற ஜூலை 22-ம் ஆண்டு நிலவரப்படி தரவுகள் தெரிவிக்கின்றன. வங்கிகள் வழங்கிய மொத்த கடன்களின் அளவில் 14.34% வீட்டு கடன்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன்கள்..!
சென்ற ஜூலை நிலவரப்படி ரூ. 17.7 லட்சம் கோடி அளவிற்கு வீட்டுக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனிநபர் மிக அதிக அளவில் வீடு வாங்குவதற்காக கடன் வாங்கி இருப்பது புலனாகிறது.
காணி நிலம் ஆவது சொந்த நிலம் இருக்க வேண்டும் என்ற ஆவல் இந்திய மக்களிடையே உள்ளது. தன் வாழ்நாளில் சொந்த வீட்டிற்கு குடி போக வேண்டும் என்பதுதான் பல இந்தியர்களின் கனவாகும். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக அதிக அளவில் மக்கள் கடன் வாங்குவதை இந்த தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் வங்கிகள் வீட்டுக் கடன் வழங்கும் பொழுது வாங்கும் வீட்டையோ, இடத்தையோ அடமானமாக பெற்றுக்கொண்டு கடன் வழங்குவதால் கொடுக்கப்படும் கடன் திரும்பக் கிடைப்பது நிச்சயம் ஆகிறது.
அதனால் வங்கிகளும் அதிக அளவில் வீட்டு கடன் வழங்குவதற்கு விரும்புகின்றன. இதுவும் வீட்டுக் கடன் அளவு அதிக அளவாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.