ரிப்பன் கட் செய்யும் போதே சரிந்துவிழுந்த பாலம்! – மயிரிழையில் உயிர் பிழைத்த தலைவர்கள்

மேம்பாலங்களை கட்டுவதில் பல பரிணாமத்தில் முன்னேறிவிட்ட உலக நாடுகள் மத்தியிலும், மூன்றாம் தர நாடுகளில் கட்டப்படும் பாலங்கள் இன்றளவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருப்பதில்லை என்பதற்கு உதாரணமாக காங்கோ நாட்டில் ஓர் சம்பவம் நடந்துள்ளது. 

மேலும் படிக்க | பரிசல் ஓட்டி பள்ளிக்கூடத்துக்கு போகும் பிஞ்சுகள்- கிருஷ்ணகிரியில் ஓர் தண்ணீர் தீவு!

காங்கோவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவின் போதே சரிந்துவிழுந்த அவலம் நிகழ்ந்துள்ளது. இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காங்கோவில் உள்ளூர்வாசிகளுக்கு மழைக் காலங்களில் ஏற்படும் சிரமத்தைத் தடுக்க, புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள் புதிய பாலத்தின் ரிப்பனை கத்திரியைக் கொண்டு வெட்டும்போது பாலம் இரண்டாக உடைந்தது.

உடையும் நேரத்தில் தலைவர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் பாலத்தின் மீதே நின்றிருந்தனர். பாலம் சரியும் நொடியில் உடனடியாக பாலத்திற்கு இந்தப் பக்கம் நின்றவர்கள் அதிகாரிகளை மீட்டனர். நல்லவேளையாக, அதிகாரிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. 

இந்த நிலையில் விபத்தினை பலரும் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இக்காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. வீடியோவைக் கண்ட காங்கோ வாசிகள் பலரும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைப் பதிவிட்டுள்ளனர். பாலம் கட்டுவதில் பொறியாளர்களுக்கும், அரசுக்கும் ஏன் இத்தனை அலட்சியம் என்றும், இது முற்றிலும் வெட்கக் கேடான விவகாரம் என்றும் புலம்பித் தீர்க்கின்றனர். 

இதேபோல், மற்றொரு நபர்கள் பாலம் விழுந்த காட்சியைப் பதிவிட்டு, காங்கோ அரசை சரமாரியாக கலாய்த்து வருகின்றனர். ”இவை எல்லாம் வரி கட்டுப்பவர்களின் பணம்.. இது குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்று ஓர் காங்கோ வாசி பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ, ‘ரிப்பன் தான் அந்தப் பாலத்தை தாங்கி இருந்தது’ என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | மரக்கட்டைகளை வைத்து தற்காலிக பாலம் – அதிகாரிகளின் அலட்சியத்தால் ஊர்மக்கள் எடுத்த முடிவு

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.