மஹா.,வில் 37 லட்சம் ஜன் தன் கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அவுரங்காபாத்: மஹாராஷ்டிராவில் ஜன் தன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளில் 37 லட்சம் கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் செயல்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த 2014ம் ஆண்டு வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு துவங்கும் வகையில், ‘ஜன் தன் யோஜனா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ஆதார் கார்டை வைத்து மக்களுக்கு வங்கி கணக்குகள் துவங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 43 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வங்கி கணக்குகள் துவங்கப்பட்டன. இந்நிலையில் மஹாராஷ்டிராவில் துவங்கப்பட்ட 12 சதவீத வங்கி கணக்குகள் செயல்பாட்டில் இல்லை என ‘பேங்க் ஆப் மஹாராஷ்டிரா’ பொது மேலாளர் விஜய் காம்ளே கூறியுள்ளார்.

latest tamil news

அவுரங்காபாத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பாகவத் காரட் தலைமையில் நடந்த மாநில பேங்கர்ஸ் கமிட்டி கூட்டத்துக்கு பிறகு அவர் கூறியதாவது: மஹாராஷ்டிராவில் 3.16 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் உள்ளன. இதில் 37 லட்சம் கணக்குகள் செயல்படாமல் உள்ளன. அந்த கணக்குகளில் ஒரு ரூபாய் கூட இல்லை. எனவே அந்த கணக்கு வைத்த நபர்களை தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி, கணக்கை செயல்பாட்டில் வைக்க கூற வேண்டும். மஹா.,வில் ஜன் தன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்குகளில் ரூ.10,938 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.