சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கமல் மற்றும் ரஜினி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் ட்ரெயிலர் அந்தந்த மொழிகளின் முன்னணி நடிகர்கள் இந்த ட்ரெயிலரை வெளியிட்டனர்.
இயக்குநர் மணிரத்னம்
மணிரத்னம் தன்னுடைய கதைகளில் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் இருக்குமாறு எப்போதுமே பார்த்துக் கொள்வார். இவரிடம் இருந்து அவ்வளவு சீக்கிரத்தில் பாராட்டை வாங்கிவிட முடியாது. அதிகமான திட்டுக்களே கிடைக்கும் என்றும் அதில் அந்தக் காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்று அவருடன் பணியாற்றிய முன்னணி நடிகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படம்
தற்போது தன்னுடைய கனவு ப்ராஜெக்டான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்துள்ளார் மணிரத்னம். மேலும் லைகா நிறுவனத்துடன் இணைந்து படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். வரும் 30ம் தேதி படத்தின் முதல் பாகம் பான் இந்தியா படமாக சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது.
பிரம்மாண்டமான இசை வெளியீடு
முன்னதாக இந்தப் படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக கமல் மற்றும் ரஜினி கலந்துக் கொண்டனர்.
ஒன்றாக மேடையேறிய ரஜினி & கமல்
நிகழ்ச்சியில் கமல் மற்றும் ரஜினி இருவரும் ஒன்றாக மேடை ஏறி, பொன்னியின் செல்வன் நாவல் மற்றும் படம் குறித்து பேசினர். இந்தப் படத்தின் உரிமையை முதலில் எம்ஜிஆர் வைத்திருந்த நிலையில், அடுத்ததாக இந்த உரிமையை தான் பெற்றதாக கமல் தெரிவித்தார். உடனடியாக படத்தை தயாரிக்கவும் எம்ஜிஆர் அறிவுறுத்தியதாக குறிப்பிட்டார்.
கமலை இருக்கையில் அமரக் கேட்ட ரஜினி
ஆனால் இந்தப் படம் தற்போது மணிரத்னத்திற்கு சாத்தியப்பட்டுள்ளதாகவும் கமல் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ரஜினி, தான் அதிகமான கருத்துக்களை இந்த மேடையில் பேசவுள்ளதாகவும் அதனால் கமல் நீண்டநேரம் மேடையில் நின்றுக் கொண்டிருக்காமல் தன்னுடைய இருக்கையில் சென்று அமர்ந்துக் கொள்ளுமாறும் ரஜினி கேட்டுக் கொண்டார்.
மறுப்பு தெரிவித்த கமல்
ஆனால் அதை மறுத்த கமல், பரவாயில்லை தான் மேடையிலேயே இருக்கிறேன் என்று கூறினார். தன்னுடைய நண்பர் பேசுவதை தொடர்ந்து ரசித்து பார்த்த கமல், இறுதியில் ரஜினி குறித்த நடிகர் சிவாஜி கணேசனின் கருத்தையும் மேடையில் பகிர்ந்தார். இதனால் அந்த இடமே சுவாரஸ்மாக அமைந்தது.