ராபர்ட் வதேரா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ‘பாரத் ஜோடோ’ யாத்திரை பற்றிய புகைப்படத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரின் புகைப்படங்களுக்கு அருகில், ராபர்ட் வதேரா புகைப்படமும் இருந்தது.
இதுகுறித்து பாஜக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், “ராபர்ட் வதேரா பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துக்கொள்வது வேடிக்கையாக இருக்கிறது… இப்போது ஊழலுக்கு எதிராக பேசுவதாக கூறுவாரா? “ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியிலுள்ளவர்களின் உறவுமுறையாலும், காங்கிரஸ் செய்த ஊழலிலும் ராபர்ட் வதேரா ஆதாயம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு இவர் மேல் இருந்தது. தான் காங்கிரஸிலுள்ளவர்களின் உறவுமுறை என்பதால் நியாமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது என்று அவர் இதை மறுத்திருந்தார். மேலும் வதேரா `தனிநபர் மட்டுமே’ அவரை உறவுமுறை வைத்து குற்றஞ்சாட்டுவது அரசியலில் பழிவாங்கும் செயல் எனவும் காங்கிரஸ் அப்போது கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராபர்ட் வதேராவின் காங்கிரஸ் சின்னத்துடன் கூடிய அரசியல் போஸ்டரால், அதே குடும்பத்தில் மேலும் ஒரு அரசியல்வாதியா? என்பது போன்ற கேள்விகள் எழுந்திருக்கிறது. இதுகுறித்து பலரும் அவரிடம் கேள்விகள் எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் பதில் ஏதும் அளிக்கவில்லை.. கடந்த 2019 தேர்தலின் போது, அவர் உத்தரப்பிரதேசத்தின் மோரதாபாத்தில் வேட்பாளராக நிற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடததக்கது.