ஒட்டு மொத்த தமிழரின் பெருமையை சொல்லும் படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது . இப்படம் கல்கியின் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலாகும். இந்நாவலை படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்த நிலையில் அது நடக்கவில்லை. தற்போது ‘மணிரத்னம்’ இதை பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் திரைப்படமாக்கியுள்ளார். இதற்கு இசையமைப்பாளராக ‘ஏ. ஆர். ரகுமான்’ பின்னணி இசை அமைத்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ‘ரவி வர்மன்’ பணியாற்றியுள்ளார். இப்படத்தை லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் :
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், சோழ நாடு தான் பொற்காலத்தை அடைவதற்குமுன், வானில் ஒரு பெரும்பால் விண்மீன் தோன்றியது. சோழ அரச குலத்தில் ஒருவரை அந்த விண்மீன் பழிக்கொள்ளும் என்றனர் ஜோதிடர்கள். பகை நாட்டை சூழ்ந்தது, கடல் கொந்தலித்தது, வஞ்சம் அரண்மனை புகுந்தது. இவ்வாறு முதல் 40 நொடிகளில் கதையின் கருவை உலகநாயகன் கமலஹாசனின் கம்பீரக்குரலில் துவங்குகிறது. குதிரையில் வந்து வீர நடைப்போட்ட ஆதித்ய கரிகாலன் ஆக நடித்திருக்கும் விக்ரம். சோழ நாட்டின் காவலன் சோழ மக்களின் வேலைக்காரன் என்று சோழநாட்டு இளவரசனாக அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி). எல்லா ஆசையும் உள்ள நேர்மையான ஒருவன் ஆதித்ய கரிகாலனின் நண்பன் வந்தியத்தேவனாககார்த்திக்.
ஆதித்ய கரிகாலனிடம் இலங்கை சென்று என்னுடைய தம்பி அருண்மொழியை பார்த்து அவனை என்னிடம் அழைத்து வர வேண்டும் என சொல்லும்படி குந்தவையாக அறிமுகம் ஆகும் திரிஷா. வாள் சண்டையின் நடுவே அருண்மொழி வர்மன், கதறிய கரிகாலன் என சிறப்பான காட்சி அமைப்புகள் அமைத்திருந்தது. தஞ்சைக்கு அழைக்கும் குந்தவை, மறுக்கும் கரிகாலன் காரணம் நந்தினி என கேட்க அப்போது அறிமுகம் ஆகிறாள் நந்தினி (ஐஸ்வர்யா ராய்). இவ்வாறு ஒவ்வாரு கதாபாத்திரத்தின் அறிமுகம் அமைக்கப்பட்டிருந்தது.
வாள், வில், குதிரை, யானை என அனைத்திலும் இருக்கும் சண்டை காட்சியின் அமைப்புகள் பிரம்மிக்கவைகிறது . கடலில் கப்பல், நெஞ்சில் பாயும் வில் போன்ற காட்சிகள் கம்யூட்டர் க்ராபிக்ஸ் (CG) சிறப்பாக செய்துள்ளனர். 3:23 நிமிடம் கொண்ட இம்முதல் பாகத்தின் ட்ரெய்லர் ரசிகர்களில் பாராட்டை பெற்றுவருகிறது. Twitter, Facebook, Instagram, WhatsApp மற்றும் எல்லா இணையதளத்திலும் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் காட்சிகளே ஆட்கொண்டிருக்கின்றன.
(சிறப்பு செய்தியாளர்; உதயசீலன்)