புதுடெல்லி: வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வியூகம் வகுப்பது தொடர்பாக டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்றுஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2019 தேர்தலில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்த தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மற்ற அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது கட்சியின் ஒவ்வொரு அமைச்சருக்கும், மூன்று முதல் 4 தொகுதிகள் வரை கட்சிக்கு வெற்றி தேடித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதற்கான திட்டங்களை சமர்ப்பிக்கவும் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவுக் கொள்கை
முன்னதாக புதிய தேசிய கூட்டுறவுக் கொள்கையை உருவாக்குவதற்காக 47 பேர் கொண்ட தேசியஅளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறைமற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவதற்காக புதிய தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கப்படுகிறது.