ஆதார் அட்டை மூலம் பல சேவைகள் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது.
இதன் அடிப்படையில், தனிநபர்கள் இப்போது தங்கள் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் தங்கள் தொலைப்பேசிகளில் தங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பண இருப்பைச் சரிபார்க்கலாம்.
இது ஸ்மார்ட்ஃபோன் இல்லாத மற்றும் இணைய இமைப்பு இல்லாத மூத்த குடிமக்கள் மற்றும் பெரியவர்களுக்குப் புதிய சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் 134 கோடிக்கும் அதிகமான ஆதார் அட்டைகள்.. ஜூலையில் மட்டும் எவ்வளவு?
ஆதார் அட்டை
ஆதார் அட்டை மக்களின் முக்கிய அடையாள ஆவணமாகப் பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல் பல சேவைகளை இதன் மூலம் பெற்று வருகிறோம். ஆதார் அட்டை உடன் ஒருவரின் வங்கிக் கணக்குகள், வாகனங்கள், ஓட்டுநர் உரிமங்கள், காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் பிற முக்கியச் சேவைகளுடன் இந்த ஆதார் அட்டை இணைக்கப்பட்டுள்ளதால் ஆதார் அட்டை சேவைகள் மிகவும் நம்பகத் தன்மையுடன் உள்ளது.
வங்கி கணக்குப் பேலென்ஸ்
சம்பளக் கணக்கு அல்லது ஏதேனும் வங்கிக் கணக்கு இருப்பை அதாவது பேலென்ஸ் செக் செய்ய வேண்டும் என்றால், ஒருவர் முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கிய 12 இலக்க எண்ணை, வங்கி கணக்குடனும் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும்.
ஆதார் எண், வங்கி கணக்கு, மொபைல் எண்
நீங்கள் ஏற்கனவே ஆதார் எண், வங்கி கணக்கு, மொபைல் எண் இணைக்கப்பட்டு இருந்தால், நேரடியாக வங்கி கணக்கின் பேலென்ஸ் அளவீட்டை தெரிந்துகொள்ளும் படிகளுக்குச் செல்லலாம்.
பேலென்ஸ் தெரிந்துகொள்வது எப்படி
1. புதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து *99*99*1# என்று டைல் செய்யவும்
2. அதன் பின் 12 இலக்க ஆதார் எண்ணை-ஐ டைப் செய்யவும்
3. மீண்டும் ஒரு முறை டைப் செய்து உறுதி செய்ய வேண்டும்.
4. அடுத்த நொடியோ பிளாஷ் மெசேஜ் ஆக உங்கள் வங்கிக் கணக்கின் பேலென்ஸ்-ஐ காட்டும்.
பலன்கள்
உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி உங்கள் வங்கி இருப்பைச் சரிபார்க்கும் வசதி மூலம் பல நேரத்தில் நமக்குப் பலன் அளிக்கும். நீங்கள் ஏடிஎம் அல்லது வங்கி இருப்பிடத்திற்கு அருகில் இல்லாவிட்டாலும் அல்லது உங்கள் ஏடிஎம் கார்டு அல்லது பாஸ்புக்கை எடுத்துச் செல்லாவிட்டாலும் உங்கள் இருப்பை எங்கு வேண்டுமானாலும் சரிபார்க்கலாம்.
Aadhaar card: How check bank balance using aadhaar card; Step by step guide
Aadhaar card: How check bank balance using aadhaar card; Step by step guide ஆதார் மூலம் வங்கி பேலென்ஸ் செக் செய்வது எப்படி..? ரொம்ப ஈசி..!