பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மாறுவேடத்தில் மருத்துவமனையை விசிட் செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிஹார் மாநிலத்தில் அரசியலுக்கு பஞ்சம் இல்லாத நிலை நீடிக்கிறது. நிதிஷ் குமார் மற்றும் பாஜக இணைந்து நடத்திய கூட்டணி ஆட்சிக்கு முற்று புள்ளி வைத்து பின்னர் நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கரம் கோற்றனர். பின்னர் இது கூட்டணியாக உருவெடுத்து சுமூகமான முறையில் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வகிக்கும் தேஜஸ்வி யாதவ் திடீரென்று அதிரடி சோதனை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
பீகார் மாநில அரசில் சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஆகியவற்றை கையாளும் துணை முதல்வர் தேஜஸ்வி சில தினங்களாக தனது துறை சார்ந்த துப்புரவு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் திடீரென்று மருத்துவமனையிலும் விசிட் அடித்துள்ளார். மருத்துவமனையின் தரம் மற்றும் நிர்வாகம் பற்றி ஆராய அவர் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
முதல்வன் திரைப்பட பாணியில் அவர் மாறுவேடத்தில் மருத்துவமனையை விசிட் செய்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் மேற்கொண்ட ஆய்வு பணியில் மருத்துவர்கள் பணியில் இருகின்றார்களா, சுகாதாரம் பேணப்படுகிறதா, சரியான அளவில் மருந்துகள் கிடைக்கின்றதா என்பன போன்ற ஆய்வுகளை அவர் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது.
அனால் அவர் மேற்கொண்ட ஆய்வு பணியில் அவருக்கு அதிருப்தியே நிலவி இருக்கிறது. பணியில் இருக்க வேண்டிய மருத்துவர்களும் பணியாளர்களும் போதுமான அளவில் இல்லை என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.
அத்தனை குறைகளையும் குறிப்பெடுத்துக்கொண்ட துணை முதல்வர் தேஜஸ்வி அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பீகார் துணை முதல்வரின் இந்த சர்பிரைஸ் விசிட் அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.