சென்னை : நடிகை அமலாபாலுக்கு தனக்கும் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை பாடகர் பவ்நிந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
பால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிசியாக நடித்தவர் நடிகை அமலா பால். அவர் ஆரம்பே மாமனாரை காதலிக்கும் ஒரு விவகாரமான படமான சிந்து சமவெளி படத்தில் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
இந்த படம் விமர்சனத்தில் சிக்கியதே தவிர பெரிதாக வரவேற்பை பெறவில்லை .ஆனால், அந்த படத்தில் அமலா பாலில் நடிப்பு பேசும்படியாக இருந்தது.
மைனா
இதையடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா திரைப்படத்தில், விதார்த்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் இத்திரைப்படம் அவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது மட்டும் இல்லாமல்,வசூலையும் வாரிக்குவித்தது. இதைடுத்து, தனுஷ்,விஜய், விக்ரம், சித்தார்த் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.
விவாகரத்து
ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான தலைவா படத்தில் நடித்த போது ஏஎல் விஜய் மீது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால், சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
கடாவர்
விவாகரத்துக்குப்பின் சினிமாவில் கவனம் செலுத்தினார் அமலா பால். மீண்டும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடங்கி, ரத்னகுமார் இயக்கத்தில் உருவான ஆடை படத்தில் நடித்தார். அந்த படத்தில் நிர்வாணமாக நடித்ததற்காக அமலா பால் கடுமையாக விமர்சிக்கப்பட்டர். தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கி அமலா பால் கடாவர் படத்தில் தடயவியல் நிபுணராக நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
ஆண் நண்பர் மீது புகார்
இதையடுத்து, அமலா பாலின் ஆண் நண்பரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆண் நண்பர் பவ்நிந்தர்சிங் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், பணமோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி அமலா பாலின் மேலாளர் விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் பவ்நிந்தர்சிங் போலீசார் கைது செய்தனர்.
திருமண ஆதரம்
விழுப்புரம் போலீசார் பவீந்தர் சிங்குடன் சேர்த்து மேலும் 11 பேரின் பெயர்களும் இருப்பதால் போலீசார் அவர்களையும் தேடி வருவதாக கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து பவ்நிந்தர் சிங் ஜாமீன் கோரி வானூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுவில், அமலா பால் தன்னை திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து புயலை கிளப்பி உள்ளார்.
கணவன் மனைவியாக வாழ்ந்தோம்
அந்த ஜாமீன் மனுவில், 2017ஆம் ஆண்டு பவ்நிந்தர் சிங்கும் மற்றும் அமலாபாலும் பஞ்சாப் முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் கடந்த சில வருடங்களாக கணவன் மனைவியாக வாழ்த்து வந்ததாகவும், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமலா பால் பவ்நிந்தர் சிங் மீது புகார் அளித்துள்ளார் என்றும் அவருடைய வழக்கறிஞர் வாதாடியுள்ளார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் பவ்நிந்தர் சிங்கிற்கு நிபந்தனை அற்ற ஜாமீன் வழங்கியுள்ளது.