வேலூர் டூ சென்னை… ஆம்புலன்ஸில் பறந்த மூளைச்சாவு அடைந்த சிறுவனின் இதயம்

உடலில் இருந்து அகற்றப்பட்ட இதயம் 4 மணி நேரத்துக்குள் மற்றொருவருக்கு பொறுத்த வேண்டும் என்பதால் 1 மணி 30 நிமிடங்களுக்குள் இதயத்தை சென்னை கொண்டு செல்லும் சவாலான பணியினை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நிஜந்தன் செய்ய உள்ளார்.
 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொசவன் புதூர் கிராமத்தைச்  சேர்ந்தவர் கோவிந்தராஜ் – அர்ச்சனா தம்பதியினரின் மூத்த மகன் சுதீஷ் (11 வயது). கடந்த 4ஆம் தேதி சாலையோரம் நடந்து சென்ற போது வாகனம் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து வேலூரில் உள்ள சிஎம்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (புதன்கிழமை) சிறுவன் சுதீஷ் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர், அவரது உடல் உறுப்புக்களை தானமாக வழங்க முன்வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிறுவனின் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. அதன்படி இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கும், கல்லீரல், இடது சிறுநீரகம், கண்கள்  வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், வலது சிறுநீரகம் எஸ்.ஆர்.எம்.சி. சென்னை மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது.

image
தானமாக பெறப்பட்ட சிறுவன் சுதீஷின் இதயம் வேலூரில் இருந்து சென்னை அமைந்தகரையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனை வரை சுமார் 169 கிலோ மீட்டர் பபணிக்க உள்ளது. உடலில் இருந்து அகற்றப்பட்ட இதயம் 4 மணி நேரத்துக்குள் மற்றொருவருக்கு பொறுத்த வேண்டும் என்பதால் 1 மணி 30 நிமிடங்களுக்குள் இதயத்தை சென்னை கொண்டு செல்லும் சவாலான பணியினை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நிஜந்தன் செய்ய உள்ளார். மாலை நேரம் என்பதால் தாமதம் ஏற்படாமல் இருக்க வேலூரில் இருந்து சென்னை வரை சாலையை காவல் துறையினர் சீரமைத்து தர உள்ளனர். பூந்தமல்லியில் MGM மருத்துவமனை வரை கிரீன் காரிடார் மூலம் போக்குவரத்து சீர் செய்யப்பட உள்ளது.

image
வழங்கமாக இந்த சாலையில் வேலூரிலிருந்து சென்னைக்கு பயணிக்க சுமார் மூன்றரை மணி நேரம் வரை எடுக்கும். மேலும் தற்போது வானம் மேகமூட்டத்துடனும் சில இடங்களில் மழை பெய்து வருவதாலும் ஆம்புலன்ஸ் இயக்குவது ஓட்டுனர் நிஜந்தனுக்கு கூடுதல் சவாலாக அமையும். ஆம்புலன்ஸ் சரியாக 4.45 மணிக்கு வேலூரில் இருந்து புறப்பட்டு சென்றது.

image
இந்தியாவிலேயே முதல் முறை:

உடல் உறுப்பு தேவைபடுவோர் Transtan.in என்ற இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு உறுப்பு மாற்று பதிவு ஆணையம் மூலம் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக மற்றும் தமிழகத்தில் மட்டுமே “விடியல்” என்ற செயலி மூலம் உடல் உறுப்பு முன்பதிவு செய்ய எளிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கர்நாடகா: உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் உயிரிழப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.