கனேடிய தோழியை குத்திக் கொன்றதாக ஒப்புக் கொண்ட பிரித்தானிய இளைஞர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி அறிவிப்பு.
டேட்டிங் செயலி மூலம் சந்தித்த கனேடிய தோழியை 23 வயது மதிக்கத்தக்க பிரித்தானிய இளைஞர் குத்திக் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
பிரித்தானியாவின் எசெக்ஸைச்(Essex) சேர்ந்த 23 வயது இளைஞர் ஜாக் செப்பிள்(Jack Sepple), டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான 19 வயதுடைய கனேடிய காதலி ஆஷ்லே வாட்ஸ்வொர்த்தை குத்திக் கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார்.
Pic: Facebook
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள வெர்னானை பகுதியை சேர்ந்த ஆஷ்லே வாட்ஸ்வொர்த் Ashley Wadsworth(19) பிப்ரவரியில் செல்ம்ஸ்ஃபோர்டில் உள்ள வீடு ஒன்றில் குத்தப்பட்டு கிடந்ததை தொடர்ந்து, அவர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் வாட்ஸ்வொர்த்தை காப்பாற்ற முயன்றும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இது தொடர்பான விசாரணையின் போது வாட்ஸ்வொர்த் மார்பில் குத்தப்பட்ட காயங்களால் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் செம்ஸ்ஃபோர்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், ஜாக் செப்பிள் குற்ற வழக்குகளில் விசாரிக்கப்பட தகுதியானவர் என மனநல மருத்துவர் உத்தரவாதம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது ஜாக் செப்பிள் “நான் குற்றவாளி” என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
இதையடுத்து ஜாக் செப்பிளுக்கு ஆயுள் தண்டனையை நிறைவேற்றுவதாக நீதிபதி தெரிவித்தார், ஆனால் தண்டனைக்கான தேதி கண்டுபிடிக்கப்படும் வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
கூடுதல் செய்திகளுக்கு: 110m யூரோ மில்லியன்கள் ஜாக்பாட்: பரிசு தொகைக்கு பிரித்தானியர் கோரிக்கை!
ஆஷ்லே வாட்ஸ்வொர்த் தனது காதலனால் குத்திக் கொல்லப்பட்டதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் பிரித்தானியாவிற்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.