போபால்: நடிகர் ரன்பீர் கபூர், அவர் மனைவிஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா உட்பட பலர் நடித்துள்ள ‘பிரம்மாஸ்திரா’. படம்நாளை வெளியாகிறது. இதையொட்டி, இயக்குநர் அயன் முகர்ஜி,நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட்ஆகியோர், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோயிலுக்குச் செவ்வாய்க்கிழமை மாலை சென்றனர்.
அப்போது பஜ்ரங் தளம் அமைப்பினர் அவர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட னர். கடந்த 2011-ம் ஆண்டு ‘ராக்ஸ்டார்’ பட விளம்பரத்தின் போது, “நான் மாட்டிறைச்சிக்கு பெரிய ரசிகன்” என்று கூறியிருந்தார் ரன்பீர் கபூர்.இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பஜ்ரங் தளம் அமைப்பினர் போராட்டம் நடந்தினர். இதனால் போலீஸார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
போராட்டம் ஒரு பக்கம் நடந்தா லும் அவர்கள் பாதுகாப்புடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து பஜ்ரங் தளம் அமைப்பினர் மீது போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.