சுகாதாரம் பேணுவதில் பெங்களூரு சிறைக்கு முதலிடம்; சென்னை மத்திய சிறைக்கு 3வது இடம்| Dinamalar

பெங்களூரு: சுகாதாரம், பராமரிப்பு ஆகிய பிரிவுகளின் கீழ்நாட்டிலேயே சிறந்த சிறையாக, தமிழகத்தின் சென்னை மத்திய சிறை 3வது இடமும், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை முதல் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணி அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள சிறைகளுக்கு சென்று சிறைகளின் நிலை, சுகாதாரம், பராமரிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்து சிறந்த சிறைகளுக்கு தேர்வு செய்தனர். இதில் இந்தியா முழுவதும் இருந்து 1,319 சிறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

3வது இடம்:


தமிழகத்தின் சென்னை மத்திய சிறை 3 வது இடத்தை பிடித்துள்ளது. இது, இந்தியாவின் பழமையான சிறைகளுள் ஒன்று. இது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ளது.

1வது இடம்:

இந்தியாவின் சிறந்த சிறையாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை முதல் இடத்தை பிடித்துள்ளது.

மேலும், ஆந்திராவில் உள்ள மத்திய சிறை 2-வது இடமும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 6-வது இடத்தையும் பிடித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.