கன்னியாகுமரி மாவட்டத்தில் களைகட்டத் தொடங்கியது ஓணம் கொண்டாட்டம். கல்லூரி மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு நடனமாடி மகிழ்ந்தனர்.
கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை கடந்த 30-ம் தேதி ஹஸ்தம் நட்சத்திரம் அன்று தொடங்கி தொடர்ந்து திருவோண நட்சத்திரம் வரை 10-நாட்கள் நடைபெறுகிறது இந்த பத்து நாள் ஓணம் பண்டிகையின் போது முந்தைய காலத்தில் கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி வீடுகளை பார்வையிட வருகை தருவதாக ஐதீகம். இதனால் இந்த பத்து நாட்களும் கேரள மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் அத்தப்பூ கோலமிட்டு அறுசுவை உணவுகளை மகாபலிக்கு படைத்து வழிபடுவதும் வழக்கம்.
வருடா வருடம் சிறப்பாக கொண்டாப்படும் இந்த ஓணம் பண்டிகை கேரள மாநில எல்கையான மலையாள மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இந்த வருட ஓணம் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்ட சுங்கான்கடை பகுதியில் அமைந்துள்ள ஐயப்பா மகளிர் கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வருட கொண்டாட்டத்தின் போது கல்லூரியில் மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு நடமாடி மகிழ்ந்தனர். மேலும் உறியடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இறுதியில் மாணவிகள் மகாபலி சக்கரவர்த்திக்கு அறுசுவை உணவுகளை படைத்து வழிபட்டனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM