சிந்துசமவெளி நாகரிகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொகஞ்சதாரோ 1922-ல் கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிந்து நதிக்கு அருகில் மொஹஞ்சதாரோ உள்ளது. இதனை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இந்நிலையில் புகழ்பெற்ற மொகஞ்சதாரோ இடம் வெள்ளத்தால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் முதன்மை அதிகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “வெள்ளம் மொகஞ்சதாரோவை நேரடியாக பாதிக்கவில்லை. ஆனால் வரலாறு காணாத மழையானது பண்டைய நகருக்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல்வேறு பெரிய சுவர்கள் இடிந்து விழந்துள்ளன. 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்காணிப்பில் இந்தப் பணி நடைபெறுகிறது” என்றார்.