iphone 14 price in India: ஆப்பிள் ஐபோன் 14 இந்தியாவில் விலை என்ன?

முந்தைய மாடலான ஐபோன் 13 இலிருந்து ஒரு சில அப்கிரேட் அம்சங்களோடு ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் ஆகிய மாடல்களும் , இது வரை ஸ்மார்ட் போன்கள் கண்டிராத வேகமான A16 பயோனிக் சிப்களை கொண்டு சிறந்த டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதற்காக ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் ஆகியவை வெளியாகியுள்ளன.

அவற்றின் விலை மற்றும் ஸ்டோரேஜ் ஆகிய விவரங்களையும், என்றிலிருந்து அவை பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்ற தகவலையும் பார்ப்போம்.

ஆப்பிள் ஐபோன் 14

ஆப்பிள் ஐபோன் 13இல் இடம்பெற்றுள்ள அதே A15 பயோனிக் சிப் கொண்டு வெளியாகியுள்ளது. ஆனால் அதன் அப்கிரேட் செய்யப்பட்ட தொழில்நுட்பத்தினால் முந்தைய மாடலை விட 18% வேகமான திறனோடு வேலை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் விலை 79,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.128GB சேமிப்பு வசதி 79,900 என்ற விலைக்கும், 256GB 89,900 என்ற விலைக்கும் , 512GB 109900 என்ற விலைக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.
ஆப்பிள் ஐபோன் 14 ப்ளஸ்

ஆப்பிள் 14இல் உள்ள அதே வசதிகளோடு 6.7இன்ச் பெரிய டிஸ்பிளே வசதியோடு வெளியாகியுள்ளது ஆப்பிள் ஐபோன் 14 ப்ளஸ்

இதன் விலை 89,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.128GB சேமிப்பு வசதி 89,900 என்ற விலையிலும், 256GB 99,900 என்ற விலையிலும், 512GB 119900 என்ற விலையிலும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.
ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ

இதுவரை நீங்கள் கண்டிராத ஸ்மார்ட் போன் வரலாற்றின் ஒரு அதிவேகமான ப்ராசஸரோடு வெளியாகியுள்ள அதிநவீன ஐபோன் மாடல். அதன் இன்-டிஸ்பிளே டைனமிக் ஐலேண்ட் வசதி தனித்துவமான வரவேற்பை பெற்றுள்ளது..

இதன் ஆரம்ப விலை 1,29,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.128GB சேமிப்பு வசதி 1,29,900 என்ற விலைக்கும், 256GB 1,39,900 என்ற விலைக்கும் , 512GB 1,59,900 என்ற விலைக்கும் மற்றும் 1TB ஸ்டோரேஜில் 1,79,900த்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.
ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோவில் உள்ள அதே வசதிகளுடன் 6.7இன்ச் பெரிய டிஸ்பிளேயில் வெளியாகியுள்ளது ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ்

இதன் ஆரம்ப விலை 1,39,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.128GB சேமிப்பு வசதி 1,29,900 என்ற விலைக்கும், 256GB 1,49,900 என்ற விலைக்கும் , 512GB 1,69,900 என்ற விலைக்கும் மற்றும் 1TB ஸ்டோரேஜில் 1,89,900த்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 9 இலிருந்து ப்ரீபுக்கிங் செய்யலாம். செப்டம்பர் 16இலிருந்து பயன்பாட்டிற்கு கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.