புதுடெல்லி: அரசுப் போக்குவரத்து துறையில், வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் புகார்தாரர்களின் சமரசத்தை ஏற்றுக்கொண்டு செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை முடித்து வைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவிவகித்தார் செந்தில்பாலாஜி. அப்போது, அவர் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, செந்தில்பாலாஜி திமுகவில் சேர்ந்து அமைச்சரனார். இந்த வழக்கில் புகார்தார்கள் சிலர் சமரசமாக சென்றுவிட்டதாக கூறியதையடுத்து, இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டிருந்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்த உத்தரவை எதிர்த்து, தர்மராஜ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ” போக்குவரத்து துறையில், வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் புகார்தாரர்களின் சமரசத்தை ஏற்றுக்கொண்டு செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.