காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ ராகுல் 2வது நாளாக பாதயாத்திரை: அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார்

நாகர்கோவில்: அகஸ்தீஸ்வரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி தொண்டர்கள் புடைசூழ ராகுல்காந்தி 2வது நாளாக தனது பாத யாத்திரையை தொடங்கினார். அப்போது பொது மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள், 3500 கி.மீ. தூரம் இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல்காந்தி நேற்று மாலை தொடங்கினார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தேச ஒற்றுமையை வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் அவலங்களை மக்களிடையே கொண்டு செல்லும் விதமாகவும் இந்த பயணம் நடைபெறுகிறது.

இந்த நடைபயணத்தை நேற்று கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி வழங்கி தொடங்கி வைத்தார். முதல்நாள் கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார். அதனை தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு 2வது நாள் யாத்திரையை தொடங்கினார்.

அதன்படி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் வந்தேமாதரம் பாடல் பாடி ராகுல்காந்தி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து கொட்டாரத்தில் உள்ள காமராஜர் சிலையை வந்தடைந்தனர். பின்னர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

பாத யாத்திரையில் பங்கேற்றவர்கள் வெள்ளை சீருடையில் அணிவகுத்து நின்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் புடைசூழ ராகுல்காந்தி பாத யாத்திரையை தொடங்கினார். தேசியக்கொடியையும், காங்கிரஸ் கொடிகளையும் தொண்டர்கள்

அனிதாவின் தந்தை, சகோதரன் ராகுல்காந்தியுடன் சந்திப்பு: நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றும் மருத்துவ இடம் கிடைக்காத விரக்தியில் அரியலூர், குழுமூரை சேர்ந்த  கூலித்தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டார். தமிழகத்தில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் ராகுல்காந்தியின் நடைபயணத்தின்போது அனிதாவின் தந்தை சண்முகம், அவரது சகோதரர் மணிரத்தினம் ஆகியோர் இன்று காலை நடைபயணத்தில் இருந்த ராகுல்காந்தியை சந்தித்தனர். அவர்களுடன் ராகுல்காந்தி உரையாடினார்.  அப்போது அவர்களை விலக்க முயன்ற தனது பாதுகாவலர்களை ஓரம்கட்டிவிட்டு அவர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார்.

நீட்தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அனிதாவின் குடும்பத்தினர் ராகுல்காந்தியிடம் முன் வைத்தனர். மேலும் தாங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருவதாகவும் ெதரிவித்தனர். செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, ஜோதிமணி எம்.பி உள்ளிட்டோர் உடன் வந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.