இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல லட்சம் கோடி ரூபாய் சொத்தினை நிர்வாகம் (AUM) செய்து வருகின்றன.
சமீபத்திய காலமாக அதிகளவில் முதலீடுகளை ஈர்த்து வரும் ஒன்றாக மியூச்சுவல் ஃபண்டுகள் மாறி வருகின்றன. குறிப்பாக இளைய தலைமுறையினர் மியூச்சுவல் ஃபண்டுகளை நாடத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் வருடத்திற்கு வருடம் மியூச்சுவல் ஃபண்டுகளில் நிறுவனங்களின் அசெட் மேனேஜ்மெண்ட்-ம் அதிகரித்து வருகின்றது.
அதிகரிக்கும் கடன் சுமை.. இந்தியாவின் வெளிநாட்டு கடன் எவ்வளவு தெரியுமா?
எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்
அதன் படி மார்ச் 2022 நிலவரப்படி, முதலிடத்தில் இருப்பது எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் ஆகும்.
இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் தான். இது மியூச்சுவல் ஃபண்டு துறையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இருந்து வருகின்றது. இது 1987ம் அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். மார்ச் 2022 நிலவரப்படி 146 ஃபண்டுகளை கொண்டுள்ளது. இது 6,47,064 கோடி ரூபாயினை நிர்வாகம் செய்து வருகின்றது.
ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட்
இந்தியாவின் தனியார் நிதி சேவை வழங்குனரில் முதன்மை இடத்தில் இருப்பது ஹெச் டி எஃப் சி ஆகும். இதுவும் தற்போது பல்வேறு ஃபண்டுகளை வழங்கி வருகின்றது. ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் கடந்த 2000 ஆண்டில் தொடங்கப்பட்டது. இது நாட்டின் லாபகரமான அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. இது கடந்த மார்ச் 2022 நிலவரப்படி 85 ஃபண்டுகளை வழங்கி வருகின்றது. இதன் கீழ், 4,32,084.97 கோடி ரூபாயினை நிர்வாகம் செய்து வருகின்றது.
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்
இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இது இந்தியாவின் பழமை வாய்ந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றாகும். இது தற்போது 142 ஃபண்ட்களை வழங்கி வருகின்றது. இதன் மூலம் 4,68,258.02 கோடி ரூபாய் மதிப்பிலான அசெட்களை நிர்வாகம் செய்து வருகின்றது.
நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட்
இந்தியாவில் உள்ள அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில், நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டும் ஒன்று. இது தற்போது 131 ஃபண்டுகளை வழங்கி வருகின்றது. இது 2,83,260.97 கோடி ரூபாய் மதிப்பிலான அசெட்களை நிர்வாகம் செய்து வருகின்றது.
ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட்
ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் தற்போது இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இது தற்போது 76 ஃபண்டுகளை வழங்கி வருகின்றது. இதன் மூலம் 2,60,335.18 கோடி ரூபாய் மதிப்பிலான அசெட்களை நிர்வாகம் செய்து வருகின்றது.
டிஎஸ்பி பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட்
இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் டிஎஸ்பி பிளாக்ராக் மியூச்சுவல் ஃபண்ட் ஒன்றாகும். மார்ச் 2022 நிலவரப்படி 49 ஃபண்டுகளை நிர்வாகம் செய்து வருகின்றது. இதன் மூலம் 1,07,873 கோடி ரூபாய் மதிப்பிலான அசெட்டினை நிர்வாகம் செய்து வருகின்றது.
கோடக் மியூச்சுவல் ஃபண்ட்
கோடக் மியூச்சுவல் ஃபண்ட் முன்னணி முதலீட்டு நிறுவனமாகும். கோடக் மியூச்சுவல் ஃபண்ட் 82 ஃபண்டுகளை வழங்கி வருகின்றது. இது மார்ச் 2022 நிலவரப்படி 2,84,617.8 கோடி ரூபாய் மதிப்பிலான அசெட்டினை நிர்வாகம் செய்து வருகின்றது.
டாடா மியூச்சுவல் ஃபண்ட்
டாடா அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட் இந்தியாவின் முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றாகும். பல தசாப்தங்களாக வெவ்வேறு வணிகத்தில் வெற்றிகரமாக கோலேச்சி வரும் டாடா குழுமம், மியூச்சுவல் ஃபண்டிலும் கணிசமான பங்கினை கொண்டுள்ளது. இது மார்ச் 2022 நிலவரப்படி, 86,396.95 கோடி ரூபாய் மதிப்பிலான அசெட்டினை நிர்வாகம் செய்து வருகின்றது.
ஆதித்யா பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட்
இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்று ஆதித்யா குழுமம். இந்த நிறுவனமும் 119 ஃபண்டுகளை கொண்டுளது. இந்த நிறுவனம் 2,95,804.91 கோடி ரூபாய் மதிப்பிலான அசெட்டினை நிர்வாகம் செய்து வருகின்றது. இது நீண்டகால ஈக்விட்டி மூலம் செல்வத்தை உருவாக்கும் ஒரு தீர்வை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
எல் & டி மியூச்சுவல் ஃபண்ட்
எல் & டி குழுமத்தின் ஒரு பகுதியான எல் & டி மியூச்சுவல் ஃபண்ட், இது பல வகையான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது மார்ச் 2022 நிலவரப்படி, 75,591.56 கோடி ரூபாய் மதிப்பிலான அசெட்டினை நிர்வாகம் செய்து வருகின்றது.
Top 10 Asset management companies in india 2022
Top 10 Asset management companies in india 2022/ இந்தியாவில் அதிக சொத்துகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் எது.. யாரிடம் அதிகம் தெரியுமா?