டெல்லி: மூன்றாம் பாலினத்தவர்களுக்கு பாகுபாடின்றி வேலைவாய்ப்பு அளிப்பது குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் அனைத்து தரப்பினரும் ஆலோசனை நடத்தி வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த திருநங்கை ஷானவி பொன்னுசாமி தொடர்ந்த வழக்கில் ஒன்றியஅரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.