சென்னை: நீட் தேர்வில் தோல்வி; தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மாணவி!

சென்னை, அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜராஜன். இவரின் மகள் சுவேதா (19). இவர் அம்பத்தூரில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 17.7.2022-ம் தேதி நடந்த நீட் தேர்வை சுவேதா எழுதியிருக்கிறார். நீட் தேர்வின் ரிசல்ட் 8.9.2022-ம் தேதி அதிகாலை வந்தது. அதில் சுவேதா தோல்வியடைந்ததும் மனமுடைந்தார். பின்னர் தன்னுடைய அறைக்கு சுவேதா தூங்கச் சென்றுவிட்டார். வீட்டில் உள்ளவர்களும் தூங்கிவிட்டனர்.

தற்கொலை

இந்த நிலையில் அதிகாலை 3:30 மணியளவில் சுவேதாவின் அம்மா அமுதா, கண்விழித்த பார்த்தபோது சுவேதா ஹாலில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அமுதா, கதறி அழுதார். அவரின் அலறல் சத்தம் பேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அமுதா வீட்டுக்கு வந்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து சுவேதாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சுவேதா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து திருமுல்லைவாயல் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்கொலை தடுப்பு மையம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.