விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது -மதுரை உயர்நீதிமன்றம்

கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள், சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது. அரசியல் மற்றும் சாதிய ரீதியிலான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சாதியை கட்சிகளின் புகைப்படங்கள், பிளக்ஸ் பேனர்கள் இருக்க கூடாது. அதேபோல போட்டியில் பங்கேற்பவர்கள் போதை பொருட்கள் மற்றும் மது அருந்தியிருக்கக் கூடாது. விதிகளை மீறினால் போட்டியை நிறுத்தலாம் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த தாசன், “திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணபுரத்தில் மாலை நேர கபடி போட்டி நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சக்திகுமார் சுகுமார குருப் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டது பின்வருமாறு:

– கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள், சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது.

– மற்றும் சாதிய ரீதியிலான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது.

– போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சாதியை கட்சிகளின் புகைப்படங்கள், பிளக்ஸ் பேனர்கள் இருக்க கூடாது.

– கபடி விளையாட்டு நடைபெறும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் இருக்க வேண்டும். அங்கு அனைத்து முதலுதவி சிகிச்சைகளுக்கான உபகரணங்கள் இருக்க வேண்டும்.

– விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும்.

– போட்டியில் பங்கேற்பவர்கள் போதை பொருட்கள் மற்றும் மது அருந்தியிருக்கக் கூடாது.

இந்த நிபந்தனைகளை மீறும் வகையில் போட்டி நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து போட்டியை  நிறுத்தலாம் என கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.