பாமகவில் பற்றிய தீ… அன்புமணியால் புலம்பும் நிர்வாகிகள்… கூடாரத்தை கலைக்க முடிவு?

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக

அக்கட்சியின் சிறப்பு பொதுக் குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபடுவதாக மே மாதம் அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பல இடங்களில் கூட்டம் கூட்டி பிரச்சாரமும் செய்து வருகிறார். பாமகவின் கீழ் கட்சி மட்டுமில்லாமல்

சங்கமும் இயங்கி வருகிறது. அதற்கதற்கு நிர்வாகிகளும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் அன்புமணி ராமதாஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக வன்னியர் சங்க வட்டாரங்கள் கூறுகின்றன. அண்மையில், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் நிறுவனர் ராமதாஸின் அழைப்பின்படி தைலாபுர தோட்டத்துக்கு சென்றுள்ளனர். அப்போது, வன்னியர் சங்கத்தில் புதிய நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான பேச்சு வார்த்தை நடத்த இருந்தது. அந்த நேரம் பார்த்து ராமதாஸ் கட்சி சம்மந்தமான வகுப்பில் கலந்துகொள்ள சென்றுள்ளார். சங்க நிர்வாகிகள் அனைவரும் தோட்டத்துக்குள் அமர்ந்து காத்திருந்தனர்.

அங்கு வந்த புதிய தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களை பார்த்து ” யார் நீங்க? எதற்காக வந்து இருக்கீங்க” என கேட்க, வந்த காரணத்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். உடனே கடுப்பான அன்புமணி, கட்சி வேறு, சங்கம் வேறையா? எழுந்து போங்க என அசிங்க படுத்தியுள்ளாராம். மனமுடைந்த நிர்வாகிகள் கேட் வரைக்கும் வந்தபோது ராமதாஸ் வந்துள்ளார். ஏன்? இங்க இருக்கீங்க உள்ளே வாங்க சாப்பிட்டு போகலாம் என கூறியுள்ளார். ஆனால், நிர்வாகிகள் எதுவுமே சொல்லாமல் நேரம் ஆகிவிட்டது எனக்கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.

அதன்பிறகு, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழியை தொடர்புகொண்ட ராமதாஸ், ” ஜி.கே. மணி சொன்ன அப்புறம்தான் விஷயம் தெரிந்தது… எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்… நீங்க வழக்கம்போல வந்து செல்லுங்கள்… சங்கப்பணி, கட்சி பணியையும் கவனியுங்கள் என ஆறுதல் கூறியுள்ளார்.

ஆனால், அன்புமனியின் நடத்தையால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள், பெரியவருக்கும், சின்னவருக்கும் பிரச்சினை என்றால் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகுதான் எங்களை வர சொல்லியிருக்க வேண்டும்… ஆனால், வந்தவர்களை இப்படி வெளியே விரட்டுவது என்ன வகை அரசியல்? அன்புமணியை எல்லாம் நம்பி நாங்க கட்சியிலும், சங்கத்திலும் இருக்க முடியாது… எங்களது இத்தனை கால உழைப்பை அதிமுகவிலோ, திமுகவிலோ காட்டியிருந்தால் எங்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருக்கும்… வன்னியர் சங்கம் பற்றி அன்புமணிக்கு என்ன தெரியும்? அடுத்தகட்ட நகர்வுகளை குறித்து யோசித்து வருகிறோம் என வேதனையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.