புதுடெல்லி: நாடு முழுவதும் நிதி முறைகேடுகளில் ஈடுபடும், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சொந்த மான இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பட்டியலில் உள்ள வற்றை தேர்தல் ஆணையம் சமீபத்தில் நேரடியாக சென்று சரிபார்த்தது. அப்போது இதில் 87 கட்சிகளின் அலுவலகங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
தங்களின் முகவரிகள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலையும் இந்த கட்சிகள் புதுப்பிக்கவில்லை. மேலும் மிக மோசமான நிதிமுறைகேடுகளிலும் சில கட்சிகள் ஈடுபட்டு வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதனால் 2,100-க்கும் மேற்பட்டபதிவு செய்யப்பட்ட அங்கீக ரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மீது வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனதேர்தல் ஆணையம் பரிந்து ரைத்தது.
இதையடுத்து குஜராத், டெல்லி,உத்தர பிரதேசம், மகாராஷ்ட்ரா, ஹரியாணா உள்ளிட்ட சிலமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
விதிமுறைகளை மீறியது தொடர்பாக 2,100-க்கும் மேற்பட்டஅங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.