கடல்கன்னி, மனிதர்களின் கற்பனையின் உச்சம் என்றால் மிகையில்லை. கடல்கன்னி குறித்து இந்தியாவில் சில புனை கதைகள் மட்டுமே இருந்தாலும் வெளிநாடுகளில் ஏராளம் உள்ளது. இதனாலேயே பல வெளிநாட்டுப் படங்களில் கடல்கன்னி குறித்த சீன்கள் அதிகமாக இருக்கும். அக்வாமேன் என்ற படம் வந்து வெற்றி நடை போட்டது.
கடல்கன்னி என்பது ஒரு பெண்ணின் தலை முதல் இடுப்பு பகுதி வரையில் மனித உடலும், இடுப்புக்கு கீழ் மீன் போல இருக்கும், கடல்கன்னி தொடர்பாகச் சில தமிழ், தெலுங்கு படங்களும் வந்துள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் வாட்டர் தீம் பார்க் அனைத்திலும் கடல்கன்னி போன்று வேடமிட்டு ஒருவர் மக்களை மகிழ்விப்பது வழக்கம்.
தமிழகத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.. ரூ.1259 கோடியில் Desalination Plant!
கடல்கன்னி
இந்நிலையில் கடல்கன்னி-க்குக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அதிகளவிலான வரவேற்பு இருக்கும் காரணத்தால் இதற்கான டிமாண்ட் அதிகமாகும். இதனாலேயே கடல்கன்னி வேடமிடுபவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்படுகிறது.
டிஸ்னி கதாப்பாத்திரம்
32 வயதான பெண் ஒருவர் டிஸ்னி கதாப்பத்திரங்களில் ஒன்றான ஏரியல் போலவே ஆடை அணிந்து, மேக்கப் போட்டுக்கொண்டு மக்கள் மத்தியில் காட்சி அளிப்பதன் மூலம் மாதம் 8000 டாலர் வரை சம்பாதிக்கிறார். இது இந்திய ரூபாய் மதிப்பில் 6 லட்சம் ரூபாய்க்கு மேல்.
வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
1989 ஆம் ஆண்டு வெளியான வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்-ன் 28வது அனிமேஷன் திரைப்படமான தி லிட்டில் மெர்மெய்டில் ஏரியல் ஒரு கற்பனையான பாத்திரமாகம். இந்தக் கதாப்பாத்தை ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் என்பவர் 1837 ஆம் ஆண்டு “தி லிட்டில் மெர்மெய்ட்” இன் தலைப்பில் கதையாக வெளியிடப்பட்டது. 1989 ஆண்டு இந்தக் கதை சில மாற்றங்கள் உடன் அனிமேஷன் திரைப்படமாக உருவானது.
வரவேற்பு
இன்று முதல் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்களில் கடல் சார்ந்து எந்தத் திரைப்படம் வந்தாலும் கடல்கன்னி தொடர்பான ஒரு காட்சி இடம்பெறும். 1989ல் அனிமேஷன் படமாக வந்த பின்னர் கடல்கன்னி கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பு உள்ளது.
குக்லீல்மோ
இந்நிலையில் தற்போது ஐந்து நட்சத்திர நிகழ்வுகள் மற்றும் குழந்தைகள் விருந்துகளில் குக்லீல்மோ (Guglielmo) என்ற 32 வயதான பெண் கடல்கன்னி போல் வேடமிட்டுக் காட்சி அளிக்கிறார். இதுமட்டும் அல்லாமல் குக்லீல்மோ இந்தக் கடல்கன்னி வேடமிட்டு டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடுவதால் அதிகப் பாலோவர்களைப் பெற்றுள்ளார்.
8000 டாலர்
குக்லீல்மோ 22 வயது முதல் கடல்கன்னி போல் வேடமிட்டு பல பார்ட்டி, நிகழ்ச்சி மற்றும் பல்வேறு வாட்டர் தீம் பார்க்கில் பணியாற்றி வருகிறார், இந்த 10 வருடத்தில் இவருடைய மாத சம்பளம் 8000 டாலராக உயர்ந்துள்ளது. இவருடைய முழுப் பெயர் எமிலி அலெக்ஸாண்ட்ரா குக்லீல்மோ.
USA Woman emily guglielmo getting 6 lakh salary a month as a professional mermaid
USA Woman emily guglielmo getting 6 lakh salary a month as a professional mermaid கடல்கன்னி-க்கு மாதம் 6 லட்சம் சம்பளம்.. இப்படியும் ஒரு வேலை இருக்கு பாஸ்..?!