டெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய, அமெரிக்க தொழில் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஷ்யா- உக்ரைன் போர், அதன் பின்விளைவுகள் மற்றும் அதனால் உலக அளவில் எற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை குறித்து பேசினார்.
மேலும் ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடங்கிய போரால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரின் நெருக்கடியான நேரத்தில் பிரதமர் மோடி மிகவும் வலிமையான அரசியல் முடிவை மேற்கொண்டுள்ளார் என அவர் கூறினார்.
மேலும் அது தான் ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவு எனவும் அந்த முடிவு பாராட்டுக்குரியது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்கூறியுள்ளார்.