மத்திய அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் அதிகரிப்பு குறித்து எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் 31%ல் இருந்து 34% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
குறிப்பாக இந்த மாதம் அகவிலைப்படி குறித்தான அறிவிப்பு வெளியாகலாமோ என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடுப்பான அம்பானி.. 3 ஜிகா பேக்டரி கட்டும் அதானி.. ஆட்டம் சூடுபிடிக்கிறது..!
எதிர்பார்ப்பு
அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் என்பது பொதுவாக மார்ச் மாதம் மற்றும் செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கப்படும். இது வரவிருக்கும் பருவத்திற்கு முன்னதாக அறிவிப்பு வெளியாகும். ஏற்கனவே மார்ச் மாதத்தில் அதிகரிக்கப்பட்டது. இதற்கிடையில் வரவிருக்கும் செப்டம்பர் மாதத்தில் அதிகரிக்கப்படுமா என்ற பெரும் எதிர்பாரப்பு இருந்து வருகின்றது.
எவ்வளவு அதிகரிக்கலாம்?
கடந்த மார்ச் மாதம் முதல் 31%ல் இருந்து 34% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இந்த விகிதமானது 34%ள் இருந்து, 38% ஆக அதிகரித்துள்ளது. ஓய்வூதிய நிவாரணத்திலும் அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது?
பொதுவாக பணவீக்கத்திற்கு ஏற்ப அரசு 6 மாதங்களுக்கு ஒரு முறை டிஏ மற்றும் டிஆர் விகிதங்களை மாற்றியமைக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைகின்றனர். ஆக இம்மாதத்தில் மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு வழங்கும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதத்தை உயர்த்தி வழங்கலாம் என்ற பலத்த எதிர்பார்க்கப்படுகிறது.
பலன் உண்டு?
மத்திய அரசு வழங்கபோகும் டிஏ மற்றும் டிஆர் உயர்வுக்காக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெரியளவில் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். குறிப்பாக விழாக்கால பருவத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வரலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.
எவ்வளவு அதிகரிக்கும்?
கணக்கீடின் படி, டிஏ விகிதம் 4% அதிகரிக்கப்பட்டால் 38% ஆக அதிகரிக்கும். உதாரணத்திற்கு 18,000 ரூபாய் அடிப்படை ஊதியம் உள்ள ஒரு ஊழியரின் சம்பளம் வைத்து கணக்கிடுவோம். 38% அதிகரிக்கப்பட்டால் டிஏ 6840 ரூபாயாக கிடைக்கும்.
7th pay commission DA hike : Will DA be hiked this month?
7th pay commission DA hike : Will DA be hiked this month?/அரசு ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கிடைக்குமா.. DA உயர்வு குறித்து என்ன அப்டேட்?